Sunday 26 May 2013

வரலாறு வாங்கலையோ வரலாறு - ராமகிருஷ்ணபரமஹம்சன்


வரலாறு வாங்கலையோ வரலாறு - ராமகிருஷ்ணபரமஹம்சன் 
அமணநெறிகளை மேண்மைப்படுத்தி; "பொருளும் சாரமும் இல்லை மாற்றம் மட்டுமே உண்டு" என அறிவித்தவன் புத்தன். இக்கூற்று; அவனது வரலாற்றில் செய்யப்பட்ட மாற்றங்களைக் காணவேண்டியதும், இதுவரை பொய்யாக வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் மாற்றத்துக்குரியனவே என்பதையும் வலியுறுத்துகிறது.
சந்திரகுப்தன், அவனின் பாட்டன் ஸ்ரீகுப்தன், அவனின் தந்தை கடோத்கசன் என கி.பி 319க்கு முன்னரும்; மற்றொரு சந்திரகுப்தனும் சமுத்திரகுப்தனும் இரண்டாம் சந்திரகுப்தனும் முதலாம் குமாரகுப்தனும் ஸ்கந்தகுப்தனும் பின்னர் புத்தகுப்தனும் வாழ்ந்ததாகப் பொய்யான வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் பழந்தமிழ்ப்பாடல்களில் வெளிப்படும் வரலாறு சந்திரகுப்தனின் காலத்தை; கி.பி.319ஆம் ஆண்டுமுதல் துவங்குவதாகக் காட்டுகிறது. உண்மை வரலாற்றை நுறுவ; கி.மு.319ல் ஒரு சந்திரகுப்தன் வாழ்ந்தான் என வரலாற்றை மாற்றியதை மாற்றியாக வேண்டும்.
மாபாரத இராமாயண வேத புராண மத நூல்களையும்; மஹாவீர புத்த கிருத்துவ நபிநாயக மாந்தரையும்; காலத்தையும் அப்படியே நம்புவோராக நமது வரலாற்றாளர்கள் உள்ளனர். மிகச்சிறந்த ஆய்வாளரான அம்பேத்கரும் விதிவிலக்கல்ல; ஆயினும் வேத இதிகாச புராணங்கள் குறித்த அவரது கருத்துக்கள் நம்பத்தகனவாகவும் ஊனண்மைவரலாற்றை உணர்த்துவனவாகவும் உள்ளன. திரு டி.டி.கோசாம்பியும் தனது "myth and reality" - "மாயையும் எதார்த்தமும்" நூலில்; இதுவரை கட்டமைக்கப்பட்ட வரலாற்றை அப்படியே நம்புவோராகத் தெரிகிறார். ஆயினும் இவர்களது தகவல்கள் உண்மை வரலாற்றைப் பழந்தமிழ்ப் பாடல்களின் உதவுயுடன் உருவாக்க உதவுகின்றன. இவர்களது தவறான நம்பிக்கைகளுக்குச் சரியான காரணங்களும் உள்ளன. தமிழரின் தமிழின் தொல்தமிழ்ப் பாடல்களை எவரும் வரலாற்று நோக்கில் ஆய்வுசெய்து; எவரது பார்வைக்கும் உணர்வுக்கும் கொண்டுசென்ற தில்லை; பிறரையும் ஆய்வுசெய்ய விட்டதில்லை. பொதுவாகவே உலகில் படித்தறிந்தோரும் கண்மூடித்தனமான மொழிப்பற்றும் பழமைப்பிடிப்பும் தொன்மையான இலக்கியங்களைக் கொண்டவர்கள் என்னும் பெருமிதப்பும் கொண்டு; உண்மையான வரலாற்றாய்வாளர்களைத் தங்களது நம்பிக்கைகளுக்கு ஊறு விளைவிப்போராகக் கருதுவதோடு; இதிகாசங்களையும் புராணங்களையும் வரலாற்றாய்வுகளுக்கு உட்படுத்துவது பெரும் தெய்வநிந்தனையாகக் கருதுகின்றனர். இன்றுவரை உலகநாடுகள் அனைத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள வரலாறுகள்; பழமையைவிரும்பும் போக்கில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இப்போக்குக்குக் காரணம் 7ஆம் நூற்றாண்டில் உருவான உலகமதங்களும் சமயங்களும்; இந்தியாவில் பெண்தெய்வங்களைப் பின்னுக்குத்தள்ளி ஆண்தெய்வங்களை உருவாக்கி முன்னிலைப்படுத்தவென்றே உருவாக்கப்பட்ட; என்தெய்வம் X உன்தெய்வம் என்னும் பக்தி இயக்கமுமே. அடிமைகளுக்கு வரலாறு இல்லை என்னும் ஆண்டைகளாளேயே வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.
மனுவின் பெயரால் ஒரு சாத்திரநூல்; நூற்றுக்கணக்கான விதிகளைக் கொண்டுள்ள போதிலும்; வரலாறோ, இயற்றியவர், மேம்படுத்தியவர் பெயர்களோ, இயற்றப்பட்ட காலமோ, அவ்விதிகளால் தண்டிக்கப்பட் டுப் பாதிப்படைந்தோர் வரலாறுகளோ கண்டறியப்படவில்லை. பெண்களுக்கெதிராக நூற்றுக்கணக்கான விதிகள் காணப்படுகின்றன. இயற்றியவர் சுமதிபார்கவா எனவும், பலநூற்றாண்டுகளில் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. இந்தப் பன்னிரண்டு ஆண்டு தண்டனையால் அல்லலுற்ற ஆட்சியாளர்கள், வரலாற்றில் இடம் பெற்றுவிடவில்லை. எவரையும் அடையாளப்படுத்த இயலாத வண்ணம்; 12 ஆண்டு வற்கடம் வந்தது, 12 ஆண்டு மழைபொழிய வில்லை, பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது, காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைந்தான், பிராமணனைக் கொன்ற பாவத்தை அடைந்தான், கொடிய பஞ்சத்தால் மக்கள் நாட்டைவிட்டு நீங்கினர் என்பதாக வெளிப்பட்டுள்ளன. இத்தகைய போக்குக்கு அடித்தளமிட்டதே களவியல் காலமான 7-8ஆம் நூற்றாண்டாகும். ஆயினும் மாபாரதம் விஷ்ணுபுராணம் ரகுவம்சம் போன்றவற்றில் சிலரது வரலாறுகள் புராண வடிவில் வெளிப்பட்டுள்ளன. இதனை மறைக்க ராமனுக்கு 14 ஆண்டுகளும் தருமனுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு அக்ஞாத வாசமும் எனப் 13 ஆண்டுகளும் எனத் தண்டனைகளை மாற்றியமைத்தனர். மனுவின் சில விதிகளைக் காண்போம்:
9. 320: "ஒரு சத்திரியன்; பிராமணர்க்கெதிராகத் தனது இரும்புக்கரத்தைப் பிரயோகித்தால், பிராமணனே தண்டிக்கலாம்; ஏனென்றால்; படைவீரன்-சத்திரியன் முதலில் பிராமணனிடமிருந்தே தோன்றினான்” (சத்திரியனுக்கெதிராக)
39 1.10,29.6; "பரிசோதித்துப் பார்ப்பதற்காகக்கூட, பிராமணன் தன் கையில் ஆயுதமெதையும் எடுக்கக்கூடாது."
10.75:"ஒதுதல், ஒதுவித்தல், தனக்காவும், பிறருக்காகவும் வேள்விசெய்தல், தானம்கொடுத்தல், தானம்பெறுதல் ஆகியவை பிராமணனுக்கு மட்டுமானவை." (திருக்குறளின் அறவோரான அந்தணருக்கு எதிராக பிராமணர்)
11.56: "தான் உயர்குடியைச் சேர்ந்தவன் எனப்பொய்கூறுவதும், பிராமணன்மீது குற்றவிசாரனையில் மன்னனுக்குத் தகவல்கொடுப்பதும், குருமீது பொய்க்குற்றஞ் சாட்டுவதும், பிராமணனைக்கொன்ற குற்றத்துக்குச் சமமாகக் கருதப்படும்".
11.75: "வேதமோதினவர்களாயும், அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற மூன்று வருணத்தாருள் எவரேனும் ஒழுக்கமில்லாத பிராமணனை; அக்ஞானத்தால் கொன்றுவிட்டால், தோசம் நீங்க ஜிதேந்திரியாளாய் கொஞ்சமாகப் புசித்துக்கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக்கொண்டு, நூறுயோசனை தூரம் புன்னிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்)
11.78: பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ்செய்துகொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில்; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது.
11.81: இவ்விதவிரதமுள்ளவனாய் மனதையடக்கி; 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாமல் சீவித்தால்-[உயிரோடிருந்தால்] தோசத்தினின்றும் நீங்குவான்.
12.96: "வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத மாறுபட்ட [புத்தனின்]கொள்கைகள் எல்லாம் விரைவில் தோன்றி அழிபவை. புதிதாக வந்த அவை பயனற்றவை, பொய்யானவை." (பௌத்தத்துக்கும் வள்ளுவனுக்கும் எதிராக)
வசிட்டதர்மசூத்திரம்: "ஒருபிராமணன்மீது எரிச்சல்படுவது, பொறாமைகொள்வது, உண்மைக்குப் புறம்பான பொய்பேசுவது, புறம்கூறுவது மற்றும் கொடூரமாக நடந்து கொள்வதும்தான் சூத்திரர்களது இயல்பான குணமாகும்."(பொதுவருக்கு எதிராக)
ஜான் ஸ்பியர்ஸ்: "ஞானம் தோன்றிய இடத்திலிருந்து" என்னும் 1957 நூலில்: "புத்தனுக்குப் பிறகான தமிழ்நூல்கள் அனைத்தையும் பிராமணர்கள் அழித்துவிட்டனர் " எனக்குறிப்பிட்டு மேலும் பல தகவல்களைக் குறிப்பிடுகிறார்.
இன்றிருக்கும் பைபிள் கி.பி.692ல் தொகுக்கப்பட்டது. பைபிளில் உள்ள தகவல்களுக்கான ஆதாரங்கள் மேலைநாட்டில் இல்லை; தென்னகத்தில்தான் உள்ளன. இவைகுறித்த ஆய்வுகள் பல உள்ளன. புத்தமத திரி பீடகங்கள், லலித விஸ்தாரம், தம்ம பதம் நூல்களில் கண்ணன், முருகன் வரலாறுகள் உள்ளன. இவற்றுக்குப் பிற்பட்டே; கி.பி.692ல் பைபில் உருவாக்கப் பட்டது; புத்தன் மால், குறிப்பாக முருக வரலாற்றோடு ஒப்பிடத்தக்க தகவல்கள், பைபிளில் பெருமளவில் உள்ளன.
சந்திரகுப்தனின் மகதநாட்டின் தலைநகரமான பாடலிபுத்திரம், சோனைநதி (சோனன் -சூரியன்)அருகில் இருந்ததை லெப்டினன்ட் கர்னல். ஏ. வாட்டல் (waddel); புதைபொருள் ஆய்வுசெய்து; கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
புத்தனின் பிறப்புக்காலத்தை இருபத்தியொரு தலைமுறைக் காலத்துக்கு முன்னதாக மாற்றியதோடு இறந்து மறைந்த இறையனாரை உயிர்ப்பித்துச் சங்கத்தலைவனாக்கிய வச்சிரநந்தியின் காலத்தையும் இருபத்தியொரு தலைமுறைக் காலத்துக்குப் பின்னதாக மாற்றி; காலக்கணிதத்தில் பல திருத்தங்களைச் செய்துள்ளனர். உண்மைச் சந்திரகுப்தன் வாழ்ந்த கி.பி 4ஆம் நூற்றாண்டைக் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்றனர். காலக்கணிதத்தில் தெற்கில் உள்ள கணிதத்துக்கும் வடவரின் கணிதத்துக்கும், சந்திரமான வருடத்துக்கும் சௌர(சூரிய)மான வருடத்துக்கும் பலவிதமான முறைகளும், குழப்பங்களும், வேற்றுமைகளும் உள்ளன. சந்திரமான வருடத்தைச் சந்திரகுப்தன் காலம் முதலாக வடவர் பயன்படுத்தினர். பருவமாற்றங்களைக் கணக்கில் கொள்ளாததால் உண்டான மாற்றங்களை உணர்ந்து; ஆண்டுக்கணக் கீட்டைத் திருத்தியதாகவும் தெரிகிறது. நடப்பில் உள்ள கலி ஆப்தம்; கபிலர் பாடிய பழந்தமிழ்ப் பாடல்களுக்கு 49 வழி முறைக்கு முன்னர் தொடங்குகிறது. ஆயினும் இன்று குறிப்பிடப்படும் கலி ஆப்தமும் 21 தலைமுறைகளுக்கு முற்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. நமது பழைமையை அறிய உதவும் வழி முறைக்கும் தலை முறைக்குமான வேற்றுமையை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. புறநாநூறு- 201:
"அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே.. .. ..வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ ! வென்வேல் .. ." என்னும் சில அடிகள் பலவரலாற்றுக் காலங்களை முன்நிருத்துகின்றன. வடபால் முனிவன் யார்? உவரா ஈகைத் துவரை எது? 49 வழிமுறை எவ்வளவு காலத்தைக் குறிக்கும்? ஒட்டக்கூத்தரின், தக்க யாகப்பரணி நூலில் இந்திரனின் மக்கள் நாற்பத் தொன்பதின்மர் எனவும்; களவியல் உரைப்பாயிரம் 'சங்கம் இரீ இனார் முடத்திருமாரன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத் தொன்பதின்மர் என்ப' எனவும்; களவியல் சூத்திரங்களை 'நாற்பத்தொன்பது புலவர்களிடம் பொருள் காணும்படி அனுப்பினான்.' எனவும் குறிப்பிடுகின்றன.
நமது பஞ்சாங்கங்களில் ஒரு மனித ஆயுட்கால வட்டத்தை [Life Time] வழிமுறை எனக்கொண்டால் 60ஆண்டு எனக் காண்கிறோம். 49 வழிமுறை என்பது; கபிலருக்கு முற்பட்ட 60x49 =2940ம் ஆண்டு எனலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தென்னகத்தின் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள போதிலும் அன்றைய கபிலருக்கு முன்னராக, வடபால் வாழ்ந்த அகத்திய முனிவர்களை முன்னோராகவும், அவரது இன வேலிர், துவரைப்பகுதியை ஆண்டோராகவும், தன்னை அந்தணன் எனவும் கபிலர் காட்டுகிறார். எனவே நமது வரலாறும் மொழியும் செழிப்பான தொல்தமிழ்ப் பாடல்கற்கு முற்பட்டு, 2940 ஆண்டுகளும் பின்னர் குறைந்த அளவில் 1600 ஆண்டுகளும் கொண்ட கலியுகத்தின் தொடக்ககாலம் என்பதையும்; முன்னரும் தமிழருக்கான வரலாறு இருந்திருக்கவேண்டும் என்பதையும் காண்கிறோம். வேளிர் யார்? பொன்படுமால்வரை எது? வென்வேல் எனவும் வேளிருள் வேளே எனவும்; ல மற்றும் ள என்னும் இரு எழுத்துக்களையும் கபிலரே பயன்படுத்தினாரா? என்பதையும்; மெய்யெழுத்துக்களில்; ல் ழ் ற் ன் ஆகிய நான்கும் பிராமணரால் ஏன் ஒதுக்கப்பட்டு; சான்றுகளிலும் ஆவனங்களிலும் இடம்பெறவில்லை என்பதையும் காணவேண்டும்.
கலி ஆப்தம் தொடங்கப்பட்ட பிறகு; பல (சகா)ஆப்தங்களைப் புகுத்தியுள்ளனர். சாலியவாகன, விக்கிரமார்க்க, போச ராச, கொல்ல, கிருத்துவ, பசலி, ஹிஜரி, மனு முதலான கற்ப சகாப்தங்கள் என ஏழு மன்வந்தரங்கள் புகுத்தப்பட்டுக் காலக் கணித ஆண்டுக் கணக்கீட்டைச் சீரற்றதாக்கிக் குழப்பினர்; சோதிடத்திலும் பல மாற்றங்களைப்புகுத்தி; புத்தனைக் கேதுவாக்கி, அமணரை ராகுவாக்கி, செவ்வேல் முருகனைச் செவ்வாயாக்கி, முசுகுந்த பரசுராம சுக்கிரனை ரிஷபமான சந்திரகுலக் காளை-ரிஷப இராவண நெடுஞ்செழியனை வாகனமாக்கி, பாவையைக் கன்னியாக்கி, சூரியகுலத்தரைச் சிம்மத்தின் குகைக்குள்ளேயே தனது கொடியைநாட்டிப் புலிபொறித்த கரிகாலைச் சிம்மத்தில் அடக்கி, வேளிர் அறிவாளரைச் சனியென வேலைக்காரர்களாக்கி, கண்ணன்-கரவேலனைக் குருவாக்கி, பான்டியன் நெடுஞ்செழியனைப் பிறையாக்க ரிஷபத்தில் உச்சம்பெறச்செய்து புறையாகச்சூடிச் சந்திரமௌளியாகவும், சந்திரசூடேஸ்வரனாகவும் சந்திரசேகரனாகவும், பிராமணரைப் புதனாக்கி வரலாற்றை அழித்தனர். இவர்களிடையே யான உறவு நட்பு உச்சம் நீசம் ஆட்சி பகை ஆடை உணவு நிறம் என அனைத்தையும் ஆய்வுசெய்தால் இவ் உண்மைகளை நிறுவமிடியும்.
விக்கிரமார்க்கன் யார் என்பதையும் கி.மு. முதல் நூற்றாண்டைச்சார்ந்தவனா என்பதையும் ஆய்வுசெய்தாலே போதும்; இவனது வரலாறு ரிக்வேதத்திலும் புருரவசு என இடம்பெற்றுள்ளது. மதுராபுரியில் வச்சிரநந்தியால் சங்கம் அமைக்கப்பட்ட பின்னரே பழந்தமிழ்ப் பாடல்களெல்லாம் ஏட்டில் எழுதப்பட்டன. உலகச்சமயங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் பாடல்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கிருத்துவம் தோற்றுவிக்கப் பட்ட பின்னர் கி.பி.692ல் வரலாற்றுச் சான்றுகளை முற்றிலுமாகத் தவிர்த்துப் பைபிலும் பிற மதநூல்களும் உருவாக்கப் பட்டன.
களவியல் [புணர்வுக்கு] நூலுக்கு விளக்கமாக "“பெற்றோர்களால் திருமண வாழ்க்கைக்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட தலைவனும் தலைவியும் அவர்கொடுப்பக் கொள்ளாது தாமே கூடுதலின் இது வேறு ஒருவரின் பொருளைக் களவாடும் களவிலிருந்து வேறுபட்டது என்பதோடு வேதத்தை மறைநூல் என்று கூறுவது எவ்வாறு நற்பொருளைத் தருகின்றதோ அவ்வாறே களவு என்பதும் நற்பொருளைத் தரவல்லது'; “களவுவாழ்க்கை கற்பில் கரணம்வழி நிறைவுபெறவேண்டும்” என்றெல்லாம் களவியலின் இறையனார் போற்றப்பட்டார். சீவகசிந்தாமணியிலும் மணிமேகலையிலும் வெளிப்பட்ட அப்பெண்ணின் துயரங்கள் மதிக்கப்படவில்லை. தருமதத்தன்-விசாகை: திருமண உறவுகொண்டவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னரே களவு மணம் கொண்டனர். இது வெளிப்பட்டதால் ஊர் தூற்றியது, பழிசுமத்தியது தெய்வமே நேரில்வந்து விசாகை கற்புடையவள் எனக் கூறவேண்டி வந்தது. மனம்நொந்த விசாகை துறவு பூண்டாள். தருமதத்தனும் பெற்றோரும் ஊரை விட்டு நீங்கினர் எனவுள்ளது.
களவுக்காதலியால் ஒதுக்கப்பட்ட முசுகுந்தனை மீண்டும் மதிப்புள்ளவனாக, மக்கள்மனதில் எப்படிப்புகுத்துவது. இங்குதான் களவிலுக்கும், கற்பியலுக்கும், அகத்திய அகவியலுக்கும் புதியபுதிய விளக்கங்களும், வியாக்யானங்களும்; வி(வஸ்)த்தை இல்லாமல் வி(ஸ்)த்தாரமக எழுதிக் குவிக்கப்பட்டன. இவற்றுக்கு ஒரு பழைமை கற்பிக்க; சங்கப்புலவர்களின் பெயர்களும், தொல்காப்பியத்தின் உயர்கருத்துக்களும் புகுத்தப்பட்டு, இறையனார் பெயரில் செப்பேட்டில் எழுதி, இறைவனே வெளிப்படுத்தியதாகக் கற்பிக்கப்பட்டது. தொல்காப்பியனார் 'களவியல்' என்பதன் பொருளை மொழிந்துள்ளார்; முற்பட்ட விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை. மண்ணோடும் மக்களோடும் பொருந்தியிருந்த ஐந்து திணைகளை எட்டாக்கி; மீண்டும் பன்னிரண்டாக்கியவர்கள் யார்? காரணங்கள் என்ன?
"“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை;
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியழ்த் துணைமையோர் இயல்பே“" என்பது தொல்காப்பியர் குறிப்பிடும் களவியலுக்கான விளக்கப் பாடல். களவியல் என்பது காமக் கூட்டம் என்கிறார்; விளக்கம் இல்லை என்பதால்; உரையாசியர்கள் களவை ஒரு மணமுறையாகவோ, வாழ்க்கை முறையாகவோ கொள்ளவில்லை. களவினை, கற்பு வாழ்க்கையின் முன்பகுதியாக ஏற்றனர். களவொழுக்கம் கற்பில், கரணம் வழிச் சேருவதே தமிழரின் பன்பாடு என விளக்கம் அளித்தனர். பாடல்-1.
“காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்”" எண்வகைத் தமிழ்மறையோர் தேயத்தின் களவியல்-அகவியல்துறைகள் எவை? தெளிவுபடவில்லை. களவாடப்பட்டு வைதீகத்துக்கு சென்று நான்கு வருணத்தருக்கும் பிரிக்கப்பட்டுள்ளன.
1.பிரம்மம் 2.தெய்வம் 3.ஆருஷம் 4.பிரஜாபத்தியம்
5.ஆசுர 6.காந்தருவம் 7.ராக்ஷசம் 8.பைசாசம்
இவற்றில் முதல் ஆறும் பிராமணர்க்கானவை; க்ஷத்திரியனுக்கு அ சுரம் முதல் பைசாசம் வரையிலான நான்கும்; பிறருக்கு ராக்ஷசம் நீங்கலாகப் பிற மூன்றும் தருமத்துக் குட்பட்டவை என உள்ளன. இவற்றில் உத்தமமானவை என; பிராமணருக்கு முதல்நான்கும், க்ஷத்திரியனுக்கு ராக்ஷசமும், பிறருக்கு அசுரமும் குறிப்பிடப்படுகின்றன. அசுரமும், பைசாசமும் பிராமணருக்கும், க்ஷத்திரியருக்கும் ஆகாதவை எனவும் உள்ளது. சுரர் என்னும் சுராபாணம் குடிப்போரே அசுரருக்கு எதிரானோர். களவியல் நூலில் அன்றைய பெண்ணின் நிலை என்ன? பாயிரப்பகுதியில் பெண்குறித்து: "”பெண்என்பது ஏற்புச் சட்டகம், மூடக்குரம்பை, புழுப்பிண்டம்; ஐயும், பித்தும், வளியும், குற்றும், கொழுவும், புரனியும், நரம்பும், மூத்திர புரீடங்களும் என்று; இவற்றது இயைபு பொருளன்று; பொருளாயின், பூவே, சாந்தே, பாகே, எண்ணமே, அணி கலனே என்றிவ்வாற்றாற் புனையவேண்டா; தான் இயல்பாகவே நன்றாயின் என்று அதன் அசுபத்தன்மை உரைப்பக் கேட்டு நீங்குவர்"” எனக் குறிப்பிடக் காண்கிறோம்.
அனைவராலும் ஏற்கப்பட்ட கிருத்துவ ஆண்டுக் கணக்கீடும் அப்போதுதான்  உருவாக்கப்பட்டது. புத்தன் மற்றும் கிருத்து எப்போது எங்கே யாருக்கு எப்படிப் பிறந்தனர், தந்தையர் யாவர் போன்ற முக்கியமான ஐயங்கற்குச் சான்றுகள் நிறுவப்படவில்லை; புத்தன் குறித்த அசோகனின் கல்வெட்டுக்கள் போலியான வாசகங்களைக் கொண்டவை. கரவேலனின் கலிங்கத்தின் புவனேஸ்வரில்; உதகிரிமலையில் அகத்திக்கும்பாக் குகையில் இருபகுதிகொண்ட கல்வெட்டில் சிதைந்த நிலையில்: 'கலிங்கத்தின் காரவேலன், தென்னகப் பாண்டியனை வெற்றி கொண்டான்' எனவும்; அசோகனைப் போலவே, 'தமிழ் அரசர்கள் தங்களுக்கு உகந்தவர்கள்' எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் 'குமரியில் அமண முனிவர்களுக்கு' உதவியதையும்; கிரேக்கத்தின் ஹெலனுக்குப் பிறந்த வரிசுகள் தங்களுடன் பகைகொண்டிருந்ததையும் குறிப்பிடுகிறது. 'இக்கல்வெட்டு மேற்குப்பகுதியை (மும்பை-ராஜஸ்தான்) சார்ந்த அமணனால் வெட்டப்பட்டது' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கல்வெட்டில் புத்தன் குறித்த தகவல்கள் எவையும் இல்லை. இராமாயணம்-அத் 6 சருக்கம் 25முதல்: அனுமான் கேசரியின்(சிம்மத்தின்) மூத்தமகன், காற்றின் மகன்; சிறுபிள்ளையாய் இருக்கும்போது சூரியனைப் பழம் என மயங்கிப் பாய்ந்து, வெப்பத்தால் களைத்து, உதயகிரிமலையில் விழுந்து தாடை ஒடிந்ததால் அனுமன் எனப்பட்டான் என உள்ளது; மாறாக உத்தரகாண்டத்தில்: அகத்தியர்: மேருமலையின் வானர அரசன் கேசரியின் மனைவியை வாயு கூடியதால் அனுமன் பிறந்தான்; பசியால் வாடிய அனுமன் சூரியனைப் பழமென எண்ணிப் பாய்ந்தான், சூரியன் சிறுவனைச் சுடவில்லை; அங்குவந்த இராகு, அனுமனைக்கண்டு பயந்து இந்திரனிடம் முறை யிட்டான்; இந்திரன் இராகுவை முன்னேவிட்டு வந்தான்; அனுமன் இராகுவைப் பெரியபழமென எண்ணிப் பாய்ந்தான்; இராகு திரும்பி ஓட, இந்திரன் அனுமனை வச்சிராயுதத்தால் அடித்தான்; அனுமன் தாடை முறிந்து உதயகிரிமலைமேல் விழுந்தான்; வாயு அனுமனை எடுத்துச்சென்று ஒரு குகையில் மறைந்துகொண்டான்.. .. அனுமன் ரிஷிகளைத் துன்புறுத்தினான்; அஞ்சனையும் கேசரியும் சொல்லியும் கேட்கவில்லை; அதனால் ரிஷிகள் அவனது வலிமையை அறியாது ஒழிக எனச்சபித்தனர்; அதனால் தனது வலிமையறியாதவனானான்; சூரியனிடம் சென்று; ஒரேநாளில் பலகலைகளையும் கற்றான் எனப் பலதகவல்களைப் படிமவடிவில் கொடுக்கிறது. இதில் இடம்பெற்ற உதயகிரிமலையே அகத்தியன் கரவேலன் 12 ஆண்டுகள் வாழ்ந்த பகுதி; அங்குதான் சேதுமன்னன் கரவேலனின் கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இடம்பெறும் இந்திரன் மற்றும் கேசரியே முசுகுந்தன்; அவனது குழந்தையே அனுமன்; ரிக்வேதத்தில் புருரவசு என கரிகால்சோழனின் தங்கை பாவை-ஊர்வசியைக் கெடுத்தவன். அவனது மைந்தனே ஆயு என இடம்பெற்ற செங்குட்டுவன் ஆஅய்.     
அசோகன் என ஒருவனை வரலாற்றில் புகுத்தி; அவன் வெட்டியதாகப் பொய்யாகக் குறிப்பிடப்படும் பதினான்கு கல்வெட்டுக்களில் இரண்டாம் கல்வெட்டு; தென்னிந்திய; 'சோழர், சத்புத்திரர்(சதபுதோ அல்லது சத்பிதோ), கேரளபுத்திரர், தாம்ரவருணர் (சிங்களர்) ஆகியோர் நட்புநாட்டினர்' எனக்குறிப்பிடுகிறது. இதற்கான காரணம் என்ன? சற்புத்திரர்கள் (சத்புதோ அல்லது சத்பிதோ) என குறிப்பிடப்படுவோர்; பிராமணரின் சதியால் மகதத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட சந்திரகுப்த்தனுடன் இன்றைய சிரமனபெளுகொளப் பகுதியில் வாழ்ந்த; வேங்கடம், கலிங்கம் வரை, தெக்கனத்தில் விசுவா மித்திரனால் குடியமர்த்தப்பட்ட தொல் அருவாளரும் வேளிரும் ஆவர். அசோகனைத் தீர்க்கதசி, ப்ரகதி எனவும் குறிப்பிடு கின்றனர். பல ஆழ்ந்த பொருள்கொண்ட இச்சொல்லைப் பயன்படுத்துவதில் பல சமயங்களில் பூசலுக்கு வழியமைத்ததால், பின்னர் இச்சொல் அவரர் விருப்பம்போல மாற்றப்பட்டது.
கபிலன் குறிப்பிட்ட இருங்கோவேல்; கரிகால்சோழனின் விவசாய உற்பத்திப்பெருக்க காலத்தில் வாழ்ந்தவன்;. இராமாயணத்திலும் இடம்பெற்றதைப் பின்னர் காண்போம். கரிகாலுக்கு எதிராகச் செயல்பட்டதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன; அவற்றுள் பத்துப்பாட்டில் பட்டினப்பாலை; புலவர் கடியலூர் உருதிரங்கண்ணனார்; கரிகால் குறித்து:
".. . திருத் துஞ்சும் தின் காப்பின் .........
கிளை களித்துப் பகை பேணாது .. ..
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும்
நல் ஆ னொடு பகடு ஓம்பியும்
நான் மறை யோர் புகழ் ஓம்பியும் .. .
கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்ப தூஉம் மிகை படாது .. .
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம் ..
மொழி பல பெருகிய பழிதீர் தேஎயத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் .. .
"கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர்பிணி யகத்திருந்து பீடுவாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உரை நாடி நண்ணார்
செறிவுடைத் தின்காப் பேறி வாழ் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி
பெற்றவை மகிழ்தல் செய்யான்; செற்றோன்
கடி அரண் தொலைத்த .. .
முடியுடைக் கருந்தலை புரட்டும் முன்தாள்
உகிருடை அடிய ஓங்கு எழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழ .. .
விருந்துஉண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்
ஒண்சுவர் நல் இல் உயர்திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர்
தொடுதோள் அடியர் துடிபடக் குழீ இ
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய
பெருபால் செய்தும் அமையான்; மருங்கு அற
மலை அகழ் குவனே கடல் தூர்க் குவனே
வான் வீழ்க் குவனே வளிமாற் றுவன் என
தான் முன்னிய துரை போகளின்
பல் ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேற்ப
வடவர் வாட குடவர் கூம்ப ......"
தென்னவன் திறல் கெட சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாற்றானை மற மொய்ப் பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கி
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோ வேல் மருங்கு சாய
காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு மாடத்து உறந்தை போக்கி
கோயி லொடு குடி நிறீ இ
பொருவேம் எனப் பெயர் கொடுத்து
ஒருவேம் எனப் புறக் கொடாது
திரு நிலைஇய பெரு மன்எயில்
மின்ஒளி எறிப்பத் தம்ஒளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பருஏர் எறுழ்க் கழல்கால்
..அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே!"என திருமா புகழைப் பலபடியாகக் குறிப்பிடக் காண்கிறோம்.
".. . காய்சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல .. .
"பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறல் குறித்து எடுத்த உருகெழு கொடியும் .. " எனப் பாடலின் சில அடிகள் மதுரைக்காஞ்சியிலும்;
"பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய
தொல் ஆணை; நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்
நிலம்தரு திருவின் நெடியோன் போல.. .. என மாங்குடிமருதன் குறிப்பிடுவனஅப்படியே இடம்பெற்றிருப்பதும்
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல்அற முந்நீர் அடைந்த ஞான்று" என; "தெவ்வர்க்கு ஓக்கிய திருமா " வை, மணிமேகலையும் குறிப்பிடுகிறது.
இறுதிப்போர் இந்திரவிழவு குறித்துச் சிலப்பதிகாரம் இந்திரவிழவு ஊர் எடுத்தகாதையில்;
" இருநில மருங்கின் பொருனரைப் பெறாஅ
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து ' நண்ணார்ப் பெறுக - இம்
மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் ' என
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் -
அசைவு இல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழிய
பகை விலக்கியது இப்பயம்கெழு மலை ' என
இமையவர் உறையும் சிமையப் பிடர்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு .. .." எனக் குறிப்பிடுவதோடு மேலும் எங்குமே காணமுடியாத பல தகவல்களை வெளியிட்டுத் திகைப்பில் ஆழ்த்துகிறது. அசோகன் மற்றும் காரவேலனின் கல்வெட்டுகளில் தென்னக ஆட்சியளர்களை நற்புநாட்டினராகக் குறிப்பிட்ட காரணத்தையும் தெளிவாக்குகிறது.
"மாநீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,
மகதநல் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும், .. ..
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் ;
நுண்வினைக் கம்மியர் காணா மரபின ;
துயர்நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின: இவை - ..-" என; 'இமையவர் உறையும் சிமயப்பிடர்தலை'யில் 'கொடுவரி ஒற்றி'யதைப் பெரும்பாணாற்றுப்படை: இமையவர் உறையும் சிமையச் செவ்வரை வெண்திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் ..பெருங்கை யானை எனக் குறிப்பிடுகிறது. தனது "கொள் கையின்", படையினருடன் பெயர்ந்த போது, 'துயர்நீங்கு சிறப்பின்; அவர் தொல்லோர் சந்திரகுப்தனுக்கும் வாரிசுகளுக்கும்; காரவேலன்; புஸ்யமித்திரசுங்கனை வீழ்த்தி, நாட்டைப் பாதுகாத்த உதவிக்காக, கோன் இறை கொடுத்துள்ளனர் என்பதைக் காண்கிறோம். மேலும் சிலப்பதிகாரம்:
"பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி செழீயிய
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்குஇன்றி நி லையிய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த வேள்வி முழுது உணர்ந்தோரே.." என மிகச்சிறப்பாக; கரிகால், வைதீக வேள்விகளுக்கு எதிராக, முன்முயன்று அரிதினில், உண்மையின் உயர்ந்தோர் உணரும் வண்ணம், இராமாயண மாபாரதப்போர்களை நடத்திப் பிறரது ஆதிக்க வெறியை முடித்துவைத்தான் என வலியுறுத்திக் குறிப்பிடுகிறது. இமாலயத்தில் சோழருடன் தொடர்பு கொண்ட பெயர்களும் இடங்களும் உள்ளன. சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே, திபேத்துக்கு இடைப்பட்ட மலைத்தொடர் 'சோழமலைத் தொடர், அதனை அடுத் துள்ள பெருங்கணவாய்க்கு 'சோழ(ர்) கணவாய்' எனவும் பெயர்கள் உள்ளதாக திரு. இராகவையங்கார் குறிப்பிடுகிறார். கௌசாம்பியைத் தலைநகரமாகக் கொண்டது வச்சிரநாடு, உச்சைனியைத் தலை நகரமாகக் கொண்டது அவந்திநாடு. மேலும் தனது தாயைக் கெடுத்த முசுகுந்தனுக்கு எதிராக; சிலப்பதிகாரம்:
"அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது ..."எனச்சென்ற செங்குட்டுவன் - செங்கோடனுக்காக இயற்றப்பட்டு; தந்தை முசுகுந்தனுக்கு எதிராக, மாமன் கரிகால்வளவனுடன் செயல்பட்டதையும்; கனக விசயர் யார்? என்பதையும்; கண்ணகிக்கு கற்கால் கொள்ள இமயம் சென்றதாக மாற்றப்பட்டதையும் காணலாம்.
ரிக்வேதம்: "மூன்று பிரிவு மக்கள் (சேர சோழ தாம்ரவருணர்) ..வேள்விவழிபாட்டைத் தொடர்ந்து நடத்தாமல் மீறினர்?" எனக்குறிப்பிடுகிறது. (10.22.8) : "வேள்விகள் நடத்தாத, எதிலும் நம்பிக்கையில்லாத தசியூக்கள் மத்தியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்குச் சொந்த வினை முறைகள் இருக்கின்றன; அவர்கள் மனிதர்கள் என்றே அழைப்பதற்குத் தகுதியற்றவர்கள். ஓ ! பகைவர்களை நாசம் செய்பவனே, அவர்களை நிர்மூலமாக்கு, தாசர்களுக்கு தீங்குசெய்." என; கலப்பிரரை அழிக்க இந்திரமுசுகுந்தனிடம் வேண்டக்காண்கிறோம். [தஸ்யூக்கள்= வேலிர் அறிவாளர்- தமிழர்; தாசர்கள் கிருஷ்ண வருணமுடையவர்கள், (vi.47.21) கிருஷ்ண யோனி-கரவேல்குடியினர்] ரிக்வேதத்தில் வருணிக்கப்பட்டுள்ளது.
ரிக்வேதத்தில் இத்தகைய புலம்பல்கள் மேலும் பல உள்ளன; காரணம் என்ன?
கரிகால்சோழன் மக்கள்நலனுக்கு எதிரானதே வேள்விவினைகள் என்பதை நஙன்கு உணர்ந்தவன்; புறநாநூறு”-224;
"“......அறம் அறக் கண்ட நெறிமான் அவையத்து
முறைநற்கு அறியுனர் முன்னுரப் புகழ்ந்த......".” என வேள்வி வினை முறைகளை அறிந்திருந்ததைக் காண்கிறோம்.
சிலப்பதிகாரம்; பாசனேந்தி - கரவேலன் வைத்திருந்த பெரும்படையினரால் :
”"....தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்கரியாளர், புறங்கூற்றாளர் என்
கைகொள் பாசத்துக் கைப் படுவோர் ......"” எனச் சோழநாட்டில் மக்களுக்கு எதிராகச் செயல்படுவோர் கண்காணிக்கப்பட்டனர்; அவசியமெனின் தண்டிக்கப்பட்டனர் எனவும் பாதுகாப்பு மேன்மைப்படுத்தப்பட்டதையும்; உழைப்பும் உணவு உற்பத்தியும் நீர்வளம் பெருக்குவதும் முதன்மைப்படுத்தப்பட்டு உபரிப்பொருள் ஏற்றுமதியையும் கடல் வணிக மேம்பாட்டையும் பலபாடல்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. பெண்புலவர் வெண்ணிக்குயத்தி புறநாநூறு-66:
“நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உறவோன் மருக !
களி இயல் யனைக் கரிகால் வளவ ! ............”என காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய்களை ஒட்டுவதில் வல்லவர்களாகக் கரிகாலின் முன்னோர் இருந்ததையும் காண்கிறோம். இவற்றுக்கு எதிரானோர் யாவர்?
Heinrich Zimmer-1951ம் ஆண்டு நூலில்: "வடமேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்; மகதம் முதலான கீழ்த்திசை நாட்டு மக்களுடன் இணக்கமற்று நடந்துகொண்ட போதிலும்; இந்தியர் எவரும் இடம் பெயர்ந்துவிடவில்லை; வெற்றியும் தோல்வியும் மாறிமாறி அமைந்தன; இவற்றுக்குச் சான்றாக; புத்தனும் சந்திரகுப்தமௌரியனும் உள்ளனர்" எனக் குறிப்பிடுகிறார். இக்கூற்று; 'ஆரியர் யார்? பிராமணர் யார்?' என அறியாதவரென இவரைக் காட்டுகிறது.
வாஜனேயிஸம்ஹிதை - 20-17: "கிராமத்தில், வனத்தில், சபையில் சூத்திரர் அல்லது ஆரியர்க்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்திருந்தாலும், அப்பாவங்களை அழிப்பவன் நீயே!" எனக் கரிகாலிடம் அடிபணிந்தோர் யாவர்? இதன் உண்மைப் பொருளை எவரும் உணரவில்லை; கிரேக்கத்திலிருந்து மகா அலெக்சாந்தனுடன் அடிமைப்படையினராக செல்யுக்கஸ்நிகந்தனின் தலைமையில் வந்து போரிட்ட சூத்திரரே ஆரியர்; மகதத்திலிருந்து துரத்தப்பட்டு வேங்கடத் தண்டகாரண்யக்காட்டில் மறைந்து வாழ்ந்து பிரகத்தன் எனப் பெயர்பெற்ற செல்யுக்கஸ்நிகந்தன்; முசுகுந்தனின் முகரியைத் தாக்கியுள்ளனர். தென்னக ஆட்சியரைத் தாக்கிய போதெல்லாம் அடக்கப்பட்டதைப் பாடல்கள் காட்டுகின்றன. இறுதியாக கரிகாலின் தந்தை சேத் சென்னியின் படை உதவிபெற்ற முசுகுந்தன் ஆரியரைத் தாக்கிச் சிறைப்படுத்திக்கொண்டு வந்ததைச் சிலப்பதிகாரம் உறுதிப்படுத்துகிறது. தொண்டைநாடு கரவேலனது வேங்கடமலைக் காட்டைச் சேர்ந்தபகுதி. அனைத்தையும் சேர்த்து, நான்குகாதம் மலை அகழ்ந்து, வழி அமைத்து ஒழுங்குபடுத்தியவன் கரிகால். செல்குடி நிறுத்திக் குறும்பரைப்பயிற்றித் தொண்டைநாட்டில் குடியமர்த்தித் தமிழறிவித்தற்குக் புலவர் கபிலரை அமர்த்தினான். விராத்திய ஸ்தோமம் என்னும் சடங்கு செய்து தூய்மைப்படுத்தப்பட்டனர் எனப் பௌத்த ஆய்வுகள் நூலில் ஹரஹரப்பிரசாத்சாஸ்திரி குறிப்பிடுகிறார். சிறைப்பட்ட பிரகத்தன் சம்பரனாக மீனக்கொடியுடன் தண்டகாரன்யத்தில் தொல்லை கொடுத்ததாக இராமாயணத்தில் பெயர் பெறுகிறான். மகத்திலிருந்து புஷ்யமித்திரனால் துரத்தப்பட்ட ஹெலனின் வளர்ப்புத்தந்தை செல்யுக்கஸ்நிகந்தனே சம்பரனாகவும், பிரகத்தனாகவும், படைத்தலைவனாகவும் இதிகாச வேத புராணங்களிலும் இடம் பெற்றுக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில்: "ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குப் பாடியது" என இடம்பெற்றான். இந்த ஆரியப் பிரகத்தனுக்குத் தொல்லைகொடுத்த புஷ்யமித்ர சுங்கக்கூட்டத்தாரை அடக்கி மகத்தில் அமைதியை நிறுவ முயன்ற கரிகாலும் அவனது தாய்மாமன் கரவேலும் நடவடிக்கை எடுத்தபோது ஆரியருக்கு எதிராகச் செயல்பட்டோர் பணிவுடன் மொழிந்த கூற்றையே மேற்கண்ட வாஜனேய ஸமிதை குறிப்பிடுகிறது. இதுபோன்ற கூற்றுக்கள் வேதங்களிலும் பலவாறு இடம்பெற்றுள்ளன.
இப்படியாக ஆரியருடன் சேர்ந்து போரிட்டுத் தோல்வியுற்ற மோரியரும் அவுணருமே தொண்டைநாட்டில் குடியமர்த்தப்பட்டடுப் பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் என்பது பலர்+அவர்; பல்வேறு இனத்தவர் எனப் பொருள்படும்.
பல்லவரது தொடக்கக்காலச் செப்பேடுகள் காஞ்சியிலிருந்து வெளியிடப்பட்டன. தமிழறியாத பல்லவர்கள் அனைவரும் மகத, ஆ/அந்தரம் முதல் மகதம்வரை சார்ந்தவர்கள். முசுகுந்தனுடன் உறவுகொண்டு; தென்தொண்டைநாட்டு மக்களோடு மொழி காரணமாகவும் வேள்வி வினை முறைகள் காரணமாகவும் மோதல் தோன்றி; வடமொழி முதன்மைப்படுத்தப் பட்டு; சிறிது காலத்துக்குப் பிறகு உதயகிரிமலையை வடதொண்டையர் கைப்பற்றிக்கொண்டதால்; இன்றைய [உத்தரமேரு] உத்தர மருவூரை உருவாக்கினர். உத்தரமருவூரே உதயேந்திரம் எனப்பட்டது. பல்லவரது செப்பேடுகள் வேற்றிடங்களிலிருந்து வெளியிடப்பட்டன; அவை; தாம்ராய, பல்ககடமேன்மாதூரதச்னபுர, பிகீரா, ஓங்கோடு, தர்சி, ராயகோட்ட, சந்தலூர், உதயேந்திரஉருவப்பள்ளி என்பனவாகும். உதயேந்திரம் என்பது முன்னர் உதயகிரியாக இன்றைய ஒடிஸ்ஸாவில் இருந்தது. மேன்மாதுர என்பது அங்கலம்மாவுக்கான மேல்மருவத்தூரும் ஆகும். இந்த இடமாற்றத்துக்கும் பெயர் மாற்றத்துக்குமான காரணத்தைப் புலவர் கபிலரே; முசுகுந்த பரசுராம துர்யாதனனிடம் குறிப்பிடுவது நோக்கத்தக்கது; புறநாநூறு 202:
" .. ..இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேள்இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் .. ..
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே: இயல்தேர் அண்ணல்
எவ்வி தொல்குடிப் படீஇயர்" எனக்குறிப்பிடுகிறான்; “தாயம் நிறைவுற எய்திய புலிகடி மாஅல்” மற்றும் "எவ்வி தொல்குடிப் படீஇயர்" எனக்குறிப்பிடுவன, நுணுகி ஆய்வுகொள்ளத் தக்கன. 'இருபால் பெயரிய உருகெழு மூதூர்' என்பது; திருமா வளவனுக்கும் முசுகுந்தனுக்குமாக பிளவுபட்ட தொண்டை நாடும் தென்னகமுமா? தொல்குடி என்பது பழங்குடி, பழையகுடி, முதுகுடி, தொண்மையான குடி, பண்டையகுடி, எனப் பலவிதமாகவும்; பண்டவர், பண்டையர், தொண்டையர் எனவும் காணத்தக்கது. தொல்குடியினரைப் பிராமணர்; மதிப்பற்ற கீழ் நிலையினராக்கித் தண்டித்துள்ளனர் எனக் காண்கிறோம். “கேடும் கேள் இனி” என கேடுறப் போவதாக எச்சரிப்பது; பிரகத்தனின் ஆரியக்குடியினரையே குறிப்பிட்டுத் தண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிகிறது. 'இயல்தேர் அண்ணல்'; மீனக்கொடியுடன் வாழ்ந்த பிரகத்தனே.
சமகாலத் தலைவர்களையும் மக்களின் வேற்கையை நிறைவு செய்தோரையும் புராதனத் தெய்வங்களாக மாற்றி; மக்களை மயங்கச்செய்து; பொதுமக்களின் கல்வியறிவுபெறும் உரிமையைத் தடுத்துப் பொய்யாகப் புகுத்தப்பட்டதே கலப்பிரர் காலம். வரலாறற்ற ஒரு கற்பனையை உருவாக்கிக் காலத்தை மாற்றும் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டதே கலப்பிரர் காலம்.

Tuesday 14 May 2013

நம்பிக்கை = குருடு - ராமகிருஷ்ணபரமஹம்சன்

முதல் தகவல்  அறிக்கை:
கட்டுரையில்; ல ழ ற ன ஆகிய எழுத்துக் கொண்ட பெயர்ச்சொற்கள் ஆழ்ந்த பொருள்கொண்டவை. பிழையெனக்கருதித் திருத்தி மாற்றிவிட வேண்டாம். பிராமணர் இவற்றைச் சூத்திர எழுத்துக்கள் என அறிவித்துள்ளனர்.


இந்தியா மற்றும் இலங்கை குறித்த உண்மையான வரலாற்றின் சுருக்கத்தை இக்கடுரையின் தொடக்கத்தில்; பிறமொழிகளிலும் உள்ள வேத இதிகாச புராண சாஸ்த்ரங்கள் மற்றும் தொன்மையான தமிழ்ப்பாடல்கள் காப்பியங்கள் ஆகியவற்றின் சான்றுகளை ஆங்காங்கு அடைப்புகளுக்குள் ஒற்றை எழுத்துக்களில் குறிப்பிட்டும்; பின்னர் சான்றுகளை விளக்கங்களுடன் விரிவுபடுத்தியும் எழுதப்பட்டுள்ளது. சான்றுகளில் எவையொன்றும் முழுமையான வரலாற்றை வெளிப்படுத்தவில்லை; அனைத்திலும் வரலாறு சிதறிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து; எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் பயிலும்படியும் கோரப்படுகிறது. முடிவற்ற வரலாற்றுக் கட்டுரையை ஏற்பதும் விலக்குவதும் காலத்தால் இறுதிசெய்யப்பட வேண்டும்.
இதிகாசங்களில் இராமாயணம் மட்டும்தான் பல்வேறு வடிவங்களிலும் மொழிகளிலும் இந்தியா மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் கடந்த 1600 ஆண்டுகளாக இராமனின் உறவுகள்=சொந்தங்கள் குறித்து மாறுபட்ட தகவல்களுடனும் எழுதப்பட்டுள்ளன. நமது வரலாறு இந்தியாவின் வடமேற்கில் தொடங்கித் தெற்கே சென்று மீண்டும் வடக்கை வென்று தெற்கை அடைகிறது; மாபாரதமாகத் தொடங்கி இராமாயணமாக விரிந்து மீண்டும் மாபாரத்துக்குள் புகுந்து நீங்கி பக்திக்களத்தை அடைகிறது.
மாபாரதம்-1.56-33 வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு சவால் விடுகிறது: "இங்கிருப்பதெல்லாம் வேறு எங்கும் இருக்கலாம்; இங்கில்லாதவற்றை வேறு எங்கும் காணமுடியாது" என. இச்சவால்; மாபாரதத்துக்கு மட்டுமல்லாமல் வேத இராமாயண புராண பழந்தமிழ்ப் பாடல்களுக்கும் அப்படியே பொருந்துவதையும்; கடந்த நூறு ஆண்டுகளாக இவற்றில் அழகியலை மட்டுமே காணும் வரலாற்றாசிரியர்களும் வரலாற்றை வெளிப்படுத்த முன்வரமாட்டார்கள் என்பதை அறிந்தே; அன்றைய புலவர்கள்; பரிபாடல்: 1 / 32-34ல் "இலங்குபூண் மாஅல்! தெருள நின்வரவு அறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே" என ஒரு சவால் விட்டுள்ளனர். இவை அனைத்திலும் வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் படிமவடிவிலும் புராணவடிவிலும் உள்ளன. இப்படிமங்களை உடைக்கவும் புராண மொழியை உணரவும் அறியாதோருக்கு; வரலாறு என்பது 'கண்ணில் ஊமன் கடல் பட்டாங்கு' இருண்டதாக வேடிக்கைகாட்டும் என்பதே இச்சவால்களின் முரண்நகை.
உலகில் வரலாறும் மொழியும் பிரிக்க முடியாததாயினும் வரலாறற்ற இனமும் மொழியும் நீடித்து வாழ முடியுமா? மிகப்பழமை யான பாடல்களைத் தமிழில் பெற்றிருந்தும் இந்தியத் தமிழருக்கு; வரலாறு எழுதப்படாததை உணரமறுப்பது வெட்கக் கேடானது. அன்றைய இலங்கை; கடல்நீரால் பிளவுபடாமல் சேர்ந்திருந்து இராமாயண நிகழ்வுக்காலத்தில் பிரளயத்தால் இந்தியாவிலிருந்து பிரிந்ததாகச் சான்றுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
இந்தியவரலாறு சூரியகுலச் சந்திரகுப்தனின் தந்தை போரசுடன் போரிட்ட கிரேக்கன்= மரீசி=முதல் அலெக்சாந்தனில் துவங்கி சந்திரகுப்தனுடன் போரிட்ட கிரேக்கன் மகாஅலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பனில் விரிவடைகிறது. வேத, பாரத குறிப்புகளில் இரண்டு சத்தியவதிகள் உள்ளனர்; ஒருத்தி கன்யகுப்த மன்னன் காதியின் மகள் சத்தியவதி. இவளுக்குப் பிறந்தவனே ஜமதக்கினி; இவளது தாய்க்குப் பிறந்தவனே விசுவாமித்திரன். அலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பனே; புஷ்யமித்திரனால் மகதத்திலிருந்து விரட்டப்பட்டுத் தெற்கே வந்துசேர்ந்த ஜமதக்கினி. ஜமதக்கினியின் மகனே காசியப்பன் என்னும் முசு குந்தன் என்னும் பரசுராமன். இதனை மறைக்க; மறுஜென்மம் பூர்வஜென்மம் என மேலும் பல குழப்பங்களைச் செய்துள்ளனர். வரலாற்றில் இல்லாத அசோக=தேவவிரத=பீஷ்மனைச் சந்திரகுப்தனுக்குப் பிறந்தவன் எனக்காட்டி; சந்திரகுப்தனின் மகன் கரவேலன்=கண்ணனை மறைக்க முயன்றனர். மற்றொரு சத்தியவதி=ஹெலன்; அலெக்சாந்த பூர்ணகாசியப்பனின் அடிமைப் படைத்தளபதி சிவன்படவன்* =செம் படவமீனவனான இலங்கைத்தீவில் வாழ்ந்த செல்யூக்கஸ் நிகந்தனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்தவள். இவளைச் சந்திரகுப்தனுக்கு மணம்முடித்து; அவளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்கு மட்டுமே ஆட்சி யுரிமையைக் கொடுக்கக் கட்டாயப்படுத்தி; அடிமைகளைக்கொண்டு தங்களது மேளான்மையை நிறுவ முயன்றனர். மேலும் சந்திரகுப்தனை மணக்கும் முன்னரே பராசரனுடன் புணர்ந்து சத்தியவதி=ஹெலனுக்குப் பிறந்தவனே வியாசன் என்ற போதிலும் பராசரன் யார் என்பதில் குழப்பம் உள்ளது. ஆயினும் மரீசி=ரிச்சிகன்= முதல் அலெக்சாந்தனின் பேரனே பராசரன் என்பதை மாபாரதம் உணர்த்துகிறது. பாட்டன் பேரன் என இரு பராசரர்களும்; பாட்டி பேத்தி என இரு சத்தியவதிகளும் இருக்கக்கூடுமோ? இவர்களது உறவில் ஒரு விபரீதப் புணர்ச்சியை உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொருவரின் பெயர்களையும் வரிசைப் படுத்திக் கொள்வோம்.
பாட்டன்=முதல் அலெக்சாந்தன்=மரீசி=ரிச்சிகன்=பராசரன்=வசிட்டன்=பார்கவா=மனு;
மகன்=மகா அலெக்சாந்தன்= பூர்ணகாசியப்பன்=வசிட்டன்=ஜமதக்கினி=பார்கவா=மனு;
பேரன்=காசியப்பன்=பராசரன்=தேவவிரதன்=பீஷ்மன்=முசுகுந்தன்=பரசுராமன்=பார்கவா=மனு.
பிராமணரின் தலைமைப் பதவி வகிக்கும் வசிட்டருள்; ரிஷி, ராஜரிஷி, பிரம்ம ரிஷி எனப் படிநிலைகள் உண்டு. தமிழ் மற்றும் தமிழரின் தலைமைப்பதவி வகிக்கும் அகத்தியருள் நாற்பத்தொன்பதாவது அகத்தியனே கரவேலன்=கண்ணன். அமணத்தில் தலைமைப் பதவி வகிப்போர்; முன்னர் பெரும்பதவியில் இருந்தபோது தங்களை அறியாமல் அல்லது தங்கள் நாட்டில் நடக்கும் தகாச்செயலுக்குத் தண்டிக்கப்பட்டு 12 ஆண்டு அல்லது ஏழுநாட்களுக்கு அமணப்பள்ளியொன்றில் தொண்டு பரிகாரம் செய்வதாகவும்; 12ஆண்டு வடவராலும், ஏழுநாள் நம்மவராலும் விதிக்கப்பட்ட தண்டனையெனவும் சிலர் உணரலாம்.
காசிநகரில் பூர்ணகாசியப்பனால் நால்வருணக்கோட்பாடு புகுத்தப்பட்டதால் வரணாசி எனப் பெயரிடப்பட்டது. சந்திர குப்தனால் வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சந்திரகுப்தனையும் பிணித்த பூர்ணகாசியப்பன்; வசிட்டனாகப் பெயர்பெற்று; மன்னர்க்கான விதிகளை மனுதர்மம் என உருவாக்கி மனித தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க; நாடுகளை மூன்று பகுதிகளாக்கிக் கட்டுப்படுத்தியபோது மக்களிடையே அமைதியற்ற நிலை உருவானது. வசிட்டனும் மகன் காசியப்பனைத் தலைவனாக்க முயன்று; சந்திரகுப்தனின் மகன் கரவேலன்மீது பொய்க் குற்றம் சுமத்தி நாடுகடத்தினான். திரு, மயிலை சீனி வேங்கடசாமி: "சந்திரகுப்த்த மௌரியன் அரசாட்சியைத் துறந்து சமண சமயத்தைச் சார்ந்து, பத்ரபாகு முனிவருடனும் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்புநாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமணசமய "வட்டாராதெனே"(பத்ரா பஹுபட்டாரகதே) என்னும் நூல் கூறுகிறது......; இப்போதைய சிரமண பெலுகொல என்னும் பிரதேசமே பழங்காலத்தில் களபப்புநாடு என்று பெயர் பெற்றிருந்தது." எனக் குறிப்பிடுகிறார். சந்திரகுப்தனும் சூழ்நிலைக் கைதியாகிச் சிரமண பெளு கொளவுக்கு(வெள்ளைக்குளம்) கடத்தப்பட்ட நிலையில் சத்தியவதிக்குப் பிறந்த பிந்துசாரன் மற்றும் பிம்பிசாரன் ஆகிய இருவருள் மூத்தவன் கொலைசெய்யப்பட்டதால்; பீஷ்மன் என்னும் காசியப்பன் தன்னைப் பாதுகாப்பாளனாக அறிவித்துக்கொண்டு பிம்பிசாரனை இளவரசனாக்கித் தனது தந்தை பூர்ணகாசியப்பனின் மூன்று பெண்களான அம்பா அம்பிகா அம்பாலிகா ஆகியோரை மணம் செய்வித்து, அடிமைகளைப் பெருக்க முயன்றனர். மூவருள் மூத்தவள்; சால்வன் என்பானுடன் தொடர்பு கொண்டு காதலித்து வருவதால் விடுவிக்கும்படி வேண்டினாாள்; ஆயினும் சால்வன் அவளை ஏற்கமறுத்தான். இந்தச் சால்வனுடன் போரிட்டுச் சந்திர குப்தனின் மகன் கரவேலன் கொன்றான். திரும்பிவந்த அம்பா; தனது வாழ்க்கை நாசமாக்கப்பட்டதால் சிகண்டியாக ஆண் வீரர்களுக்குக்கான போர்க்கலையைக் கற்றுக் காசியப்பனைக் கொலை செய்வதாகச் சபதம்செய்து நீங்கினாள். தந்தை மகன் எனக் காசியப்பர் இருவரும் கரவேலனின் நாடுகளையும் கைப்பற்ற முயன்றனர். (வரலாற்றில் இல்லாத அசோகனாகப் புகுத்தினர்) பிம்பிசாரனும் கொலை செய்யப்பட்டதால் வாரிசில்லாத சத்தியவதி வாட்டமுற்றாள். திருமணத்துக்கு முன்னரே இலங்கையில் தன்னைப் புணர்ந்த பராசரனால் பிறந்த வியாசனை; மகனாக இருந்து இருபெண்களுடன் புணர்ந்து வாரிசை உருவாக்க விரும்பியபோது சகிக்கமுடியாத இருவரும் தங்களது பணிப்பெண்ணை வியாசனுடன் புணரவிட்டதால் விதுரன் பிறந்தான். அமிகாவும் அம்பாலிகாவும் அம்பா போலவே சிகண்டியராகிக் காசியப்பனைக் கொல்வதாகச் சபதமிட்டு நீங்கினர்.
மகதத்தில் வேத இதிகாச புராணங்களில் யாகப்பலிகளை விருப்புடன் செய்யும் புஸ்ய மித்திரன் ஜராசந்தனாகவும் தெரிகிறான். பூர்ணகாசியப்பன்=வசிட்டன்=ஜமதக்கினி எனப்பெயர்பெற்ற அலெக்சாந்தனையும்; அவனது மகன்=காசியப்பன்= முசுகுந்தன்=இந்திரன்=பரசுராமன்=மஹாவீர்=மாதேவன்=தேவவிரதன்=பீஷ்மன் எனப்பெயர் பெற்ற துர்யோதனனையும் கூட்டாளிகளையும் விரட்டித் தன்னை வேந்தனாக அறிவித்துக் கொண்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்; புஸ்ய மித்திரனை அடக்கி மகதத்தைக் கைப்பற்றியதாகவும் தனது தாயாதியருடன் மகதத்தை அடைவதில் போட்டி இருந்ததாகவும் கரவேலனின் அகத்திக்கும்பாக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன; கரவேலின் கலிங்க புவனேஸ்வரில் உதயகிரிமலை அகத்திக்கும்பாக் குகையில், இரு பகுதிகளைக்கொண்ட சிதைந்தநிலைக் கல்வெட்டு; 'கலிங்கத்தின் கரவேலன், தென்கே பாண்டியனை வெற்றி கொண்டான்' எனத்தெரிவித்து; 'தமிழ் அரசர்கள் தங்களுக்கு உகந்தவர்கள்' எனவும்; அமணரை ஆதரித்ததையும்; 'குமரியில் அமணமுனிவர்க்கு' உதவியதையும், கிரேக்கத்தின் ஹெலனுக்குப் பிறந்த வரிசுகளுக்கும் கார்வேலுக்கும் பகை இருந்ததையும் குறிப்பிடுகிறது. 'இக்கல்வெட்டு (மராட்டிய) மேற்குப்பகுதியைச் சார்ந்த அமணனால் வெட்டப்பட்டது' எனக்குறிப்பிடுவதிலும்; புத்தன் மற்றும் பௌத்தம் குறித்த தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவை மணந்த சூரியகுலத்தின் உருவப்பல்தேர் சேத்சென்னியே தாய்வழிச் சமுதாய மரபுப்படி மகதத்தின் அரசனாக வேண்டும். ஆயினும் தந்தைவழிச் சமுதாயத்தை மரபாகக்கொண்ட அலெக்சாந்த பூர்ண காசியப்ப வசிட்டன்; தனது மகன் காசியப்பனைத் தலைவனாக்கும் எண்ணத்தில் சேத்சென்னிக்கும் பிரிதாவுக்கும் குழந்தை பிறந்தால் அதனை அழிக்கச் சதிசெய்து; பிறக்கும் முன்னரே 12 ஆண்டுகள் தண்டித்திருந்தான். இதனை அறிந்த கரவேலனும் விசுவா மித்திரனும் வேங்கடமலைக் காட்டுப்பகுதியில் பிரிதாவை வைத்துக் குழந்தை கரிகால்சோழன் பிறக்கும்வரை பாதுகாத்தனர். குழந்தை பிறந்ததை மறைத்துச் சேத்சென்னியும் தனக்கு ஒரு ஆண் குழந்தைவேண்டி வேள்வி செய்வதுபோல நடித்த போதிலும் பெண்குழந்தை= பாவைதான் பிறந்தாள். இந்நிலையில் வியாசன்=ஜனகன் தன்னால் உருவாக்கப்பட்ட நாட்டில் தனது தாய் சத்தியவதியையும் சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவையும் சேத்சென்னியையும் குடியமர்த்த விரும்பியபோது வசிட்டனும் காசியப்பனும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் சத்தியவதியின் வாரிசுகளால் உருவாக்கப்படும் நாடுகளின்மீதும் தங்களுக்கு உரிமை உண்டு என நிலைநாட்டும் எண்ணமே. எனவே இந்நாடு சீதையாகக் கருதப்பட்டுச் சுயம்வரம் நடத்தப் பட்டது. 12 வயது நிறம்பிய கரிகால்=இராமனை விசுவாமித்திரன் அழைத்துச்சென்று போட்டிகளில் அசுரமுறையில் வென்று கொண்டான். இந்நிலையில் பூர்ணகாசியப்ப வசிட்டன் ஜமதக்கினியாகவும்; காசியப்பன் முசுகுந்தனாகவும் பெயர்பெற்று; சேத்சென்னியைத் தலைவனாக்கி ஏழு திசைக் காப்பாளர்களர்களை அமர்த்தி மகா அபிசேஷக விழா நடத்தினர். ஏழு திசைக் காப்பாளருள் தென்முனையின் காவலனாக அமர்த்தப்பட்டவனே மயன் என்னும் விசுவகர்மன். அப்போது இலங்கை என்னும் நாடு கடல்நீர் சூழ்ந்ததாக இல்லை; தென்னகத்துடன் சேர்ந்தே இருந்தது.
ஜராசந்த புஷ்யமித்திரனால் விரட்டப்பட்ட கரவேலன் மேற்கே துவாரகா என்னும் இன்றைய பாஞ்சாபுக்குச் சென்று சத்தியவதி= ஹெலனுடன் பிறரை வேங்கடக்காட்டுப் பகுதியில் தனக்கு விசுவாமித்திரனால் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட திருப்பதியில் குடியமர்த்தினான். அடிமைகளாக இருந்த செல்யுக்கஸ்நிகந்த கூட்டத்தரையும் புஷ்யமித்திரன் விரட்டிவிட்டதால் அவனும் பிரகத்தன்=சம்பரன் எனப் பெயர்கொண்டு தண்டகாரன்யம் என்னும் வேங்கடக்காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து அவ்வப்போது வேங்கடத்திலும் பிறபகுதிகளுலும் வழிப்பறி, களவு, கொலைத்தாக்குதல்களை நடத்தினான். முகரிப்பகுதியில்? தனது தந்தை வசிட்டனுடன் வாழ்ந்த காசியப்ப முசுகுந்தனையும் தாக்கியாதத் தெரிகிறது. தாங்கமுடியாத முசுகுந்தன்; தசரதன்= சேத்சென்னியின் உதவியை நாடினான். சேத்சென்னியும் படைவீரர்களை முசுகுந்தனுக்குத் துணையாக அனுப்பினான். செல்யுக்கஸ்நிகந்த பிரகத்தனையும் அவனது ஆரியப்படையினரையும் சிறைப்படுத்திய முசுகுந்தன் தசர சேத்சென்னியிடம் ஒப்படைத்தான். கிரேக்க அடிமைப்படையினராயினும் அவர்களுக்குத் தமிழறிவிக்கும் முயற்சியைமேற்கொண்ட கரிகாலுடன் நட்புக்கொண்ட முசுகுந்தனும் தமிழ் பயில்வதில் ஆர்வம் கொண்டவனாகத் தெரிகிறான். புலவர் கபிலரின் தலைமையில் அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது.
கரிகாலின் தங்கையும் சேத்சென்னியின் மகளுமான பாவையும் இப்பயிற்சியில் கலந்துகொண்டாள். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தித் தந்தை வசிட்டனுடன் சதிசெய்து நாட்டைக் கைப்பற்றும் முயற்சியாகப் பாவையுடன் முசுகுந்தன் பழகியுள்ளான். பாவையும் முசுகுந்தனின் நடிப்பில் ஏமாந்து கற்பை இழந்தாள். இதனை அறியாத கரிகாலும் தங்களது படையினரால் வெல்லப் பட்ட நாட்டைத் தொண்டை நாடாக்கி நீர்வளம் பெருக்கி ஆரியப்படையினருடன் பிரகத்தனைக் குடியமர்த்தினான். அடிமைகளான ஆரியரைக் குடியமர்த்துவதை விரும்பாத ஜமதக்கினி; முசுகுந்தனைத் தலைவனாக்கித் தொண்டைநாட்டைக் கைப்பற்றினர். பிரகத்தனையும் தனக்குத் துணையாக்கிக் கொண்டு மகதத்தையும் வென்று; யாக வேள்விகள் செய்து இந்திரனாகவும் அறிவித்துக் கொண்டான். இதனை விரும்பாத சேத்சென்னியும் தனது நாட்டுடன் வேங்கடத்தைச் சேர்த்துக் கரிகாலுக்கு இந்திரப்பதவியைப் பெறக் கரவேலனின் துணையுடன் முயன்றனர். இந்திரனாக அறிவிக்க யாகவேள்விகளைச் செய்ய ஜமதக்கினி விரும்பவில்லை. விசுவாமித்திரனைக்கொண்டு யாக வேள்வி செய்தபோது பாவை நிறைசூலியானாள். வேள்வியில் பலியிடவிருந்த கால்நடை(குதிரை)யை முசுகுந்த இந்திரன் கடத்திச்சென்றான். வேள்வி தடைப்பட்டது. விசுவா மித்திரனைப் புரோகிதனாக்கியதே மன்னனின் தகாநடத்தை எனப் பலிசுமத்திப் பரிகாரம் செய்ய மனிதப்பலியிட வேண்டும் என ஜமதக்கினி கட்டளையிட்டான். முசுகுந்தனால் கடத்தப்பட் பசு ஜமதக்கினியின் குடிலருகில் இருந்ததைக் கண்ணுற்ற சேத்சென்னி ஜமதக்கினியிடம் முறையிட்டான். இதனால் தனது மகன் இந்திர முசுகுந்த பரசுராமனைப் பலிகொடுக்க விரும்பாத ஜமதக்கினி; சுனஷேபனைப் பலிகொடுப்பதாக ஒப்புக் கொண்டான்.
விஷ்ணுபுராணம் கன்யகுப்த மன்னன் காதியின் மகள் சத்தியவதியை மணந்த (மனுதர்மசாஸ்த்திரத்தை இயற்றியவர் என நாரதர் குறிப்பிடும்) பிருகு=ரிஷிகன் என்னும் வயதான பிராமணன்; தனது மனைவிக்குப் பிராமணக் குணநலன் கொண்ட மகனும் தனது மனைவியின் தாய்க்கு ஒருவீரனின் குணநலன் கொண்ட மகனும் பிறக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆனால் அப்பெண்கள் ரிஷிகனின் ஆசையைத் தலைகீழாக மாற்றிவிட்டதால் சத்தியவதிக்குப் பிறப்பவன் கொலைகாரனாக இருப்பான் எனவும் அவளது தாய்க்குப் பிறப்பவன் சாந்தம் ததும்பும் பிராமண குணநலன் கொண்டவனாக இருப்பான் எனவும் அவளது கணவனே சொல்வதாகவும்; அதனைக் கேட்ட சத்தியவதி தனது அறியாமையைக் குறிப்பிட்டுத் தனக்குக் கொலைகாரக் குணநலம் கொண்ட குழந்தை வேண்டாம் எனவும் அத்தகைய குணநலம் கொண்ட பேரன் வேண்டுமானால் பிறக்கட்டும் என வேண்டுவதாகவும்; சத்தியவதிக்குச் சமதக்கினியும் அவளது தாய்க்கு விசுவாமித்திரனும் பிறந்தனர் எனவும்; ரேணுவின் மகளான ரேணுகாவைச் ஜமதக்கினி மணந்துகொண்டான்; ஜமதக்கினிக்குப் பரசுராமன் என்னும் மகன் பிறந்தான் எனவும் குறிப்பிடுகிறது. இந்தப் பரசுராமனின் குடும்ப வரலாறு மாபாரத வனபருவத்தில் உள்ளது.
கரவேலனைக் கண்ணனாகவும் காசியப்பனை உத்தமனாகக் காட்ட; எட்டாவதாகப் பிறந்து கங்கைநதி நீரைத் தடுத்து அணைபோட்ட; தேவவிரதன்=பீஷ்மன் எனப்பெயரிட்டுத் துர்யோதனானகவும் மாபாரதம் குறிப்பிட்ட போதிலும் பரசுராம துர்யோதனனே காசியப்பன் என்பதைப் பிற நூல்களும் இராமாயணமும் காட்டிவிடுகின்றன. கண்ணன்=கிருஷ்ணன் பிறந்த விருஷ்ணி (கருப்பு)குலம் பிராமணர்க்கு எதிரானது. அமணத்தைக் கைப்பற்றிய பரசுராம முசுகுந்தன் கூட்டத்தரால் கண்ணனின் தங்கையின் பேரன் பரீக்ஷித்து கொலை செய்யப்பட்டதாலேயே பார்கவ பிராமணர்கள் கண்ணனால் பலிவாங்கப் பட்டனர். மாபாரதத்தில் தருமதேவதையின் அவதாரமான விதுரன் சந்திரகுத்தவனாகவும் காட்டப்படுகிறான்; அமணத்தைப் பாம்பு எனக் குறிப்பிடுவது எல்லா மரபிலும் ஏற்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்ததாலேயே பரீக்ஷித்து இறந்தான் எனப் படிம வடிவிலேயே இத்தகவல் இடம்பெற்றுள்ளது. புத்தமதத்தின் தாக்கத்தால் கிருஷ்ணன் விஷ்ணுவாக்கப் பட்டான். மா பாரதத்தில் கிருஷ்ணனிடம் கேட்பதாக ஒரு கேள்வி; 'அவன் உலகப்பொதுக் கடவுளாயின் தன்னை ஏன் பிராமணன் என்று அறிவித்துக் கொள்ளவில்லை?' என உள்ளது. மாபாரதத்தில்; பிருஹுக்களாக =பார்கவ பிராமணராக வைதிகராக அதிக அளவில் இடம்பெற்றோரே ரிஷிகன்=மறீசியின் மகன் அலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பன்= ஜமதக்கினியின் மகன் காசியப்பன் =முசுகுந்தன்=பரசுராமன் கூட்டத்தர். வேதங்களில் பார்கவ இனம் என்பதாக எதுவும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
விரிவான வரலாறு
சூரியகுடியின் சேத்சென்னிக்குத் தென்பகுதியை மகா அபிஷேக வேள்வி நடத்தி ஏழு திசைக்காப்பாளருடன் வசிட்டன் ஒப்படைத்தான். திசைக்காப்பாளருள் கரிகாலுக்கு வசிட்டனும் விசுவகர்மனுக்குக் காசியப்பனும் முடிசூட்டினர் எனவும் கரிகால்சோழனே சுதாசன் எனப் பெயர்பெற்றதையும் வேதங்களில் காண்கிறோம்.
ரிக்வேத ஐத்ரேயபிராமணம்: உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னியை இடைநாடான சோழநாட்டின் தலைவனாக்கி; ஏழு திசைக்காவளரை அமர்த்தி நடத்திய மகாபிஷேசக விழாவைக் குறிப்பிடுகிறது; இதனை நடத்திய புரோகிதனான வசிட்டன்= ஜமதக்கினி; சென்னியைக் கட்டுப்படுத்தப் பண்ணிய முதல்வேள்வியைக் குறிப்பதாகும்.
இதில் ஏழுதிசைக் காப்பாளர்களாக இடம்பெறுவோர்: சரியாதி, சமசுஷமன், அம்பஷ்தியன், யுதமஸ்ரௌஷ்ட், மயன் எனும் விஷ்வகர்மன், (கரிகால்)= சுதாசன், மருத்தன் என உள்ளனர்; இவர்களுள் சுதாசன்=கரிகாலுக்கு முடிசூட்டியவன் வசிட்டன்; விசுவகர்மன்=மயனுக்கு முடிசூட்டியவன் வசிட்டனின் மகன்(காசியப்பன்=முசுகுந்தன்). தனக்குக் கொடுக்கப்பட்ட தென் திசை(இலங்கை)க் காவலை நெடுஞ்செழிய நகுஷனிடம் இழந்துவிட்டதாக ஒருபாடல் குறிப்பிடுகிறது(மார்டின் ஹாக், தொகுதி II, பக்523-524): "(பூமித்தாய்-இலங்கை)எந்தமனிதனும் என்னைத் தானமாகக்கொடுக்க அனுமதிக்கப் படவில்லை; ஓ விஷ்வகர்மனே நீ என்னைத் தானமாகக் கொடுத்துவிட்டபடியால் நான் கடலில் குதிப்பேன் (புயலால் தென்னகத்தை விட்டுப்பிரிந்து தனியாகக் கடல்நடுவே சென்றுவிட்டது) காசியபருக்கு(முசுகுந்தனுக்கு) நீ கொடுத்த வாக்குறுதி வீனாயிற்று" என்பதாக. இராவணன்= நெடுஞ்செழியன் மயனின் பெண்ணைக் கெடுத்து நாட்டையும் தன்வசப்படுத்திக் கொண்டதால் மயன் தனது நாட்டை இழந்து துரத்தப்பட்டான்; அண்ணன் குபேரனையும் விரட்டிவிட்டான் என்பதை இராமாயணத்தில் காண்கிறோம். எட்டாவது தலைமைத் திசைக்காப்பாளனாக (வசுதேவன்)இடம்பெறுபவனே தலைவனான இளஞ்சேத்சென்னி.
விசுவகர்ம மயனுக்கும் காசியப்ப முசுகுந்தனுக்கும் இடையே என்னவாக்குறுதி-ஒப்பந்தம் இருந்தது, மயன் ஏன் அதனை வீனடித்தான்? எங்குமே காணமுடியவில்லை; வசிட்டனுக்கும்; பராசர=முசுகுந்த= பரசுராம =துர்யோதனனுக்கும்; இராவண= நெடுஞ்செழியன் போன்றோருக்கும்; இலங்கையின் பாதுகாவலனான விசுவகர்ம மயன் எதிராகச் செயல்பட்டுள்ளான். மாபாரதத்தில் ஐவரும் திருப்பதி-த்ரோபதி-பாஞ்சாலத்தை வென்று தங்களுக்கான அரண்மனை அமைத்தபோது; அமைத்துக் கொடுத்தவன் மயனே; காரணம் காண்டவவனத் தீவிபத்திலிருந்து மயனைக் காப்பாற்றியவர்கள் பாண்டவர்கள். பரசுராம= துர்யோதனன் எளிதில் தீப்பற்றக்கூடிய அரக்கு வீட்டைக்கட்டி அதில் ஐவரைத் தங்கவைத்துத் தீயிட்டு அழிக்க முயன்ற போது; அவ்வீட்டை அமைத்த மயன்; அங்கிருந்து தப்பிச்செல்லச் சுரங்கவழியை அமைத்துக்கொடுத்துக் காத்தவன். பிற திசைக் காவலர்கள் முசுகுந்த பரசுராமனுக்கு ஒத்துழைத்து, சுதாச கரிகாலுக்கு எதிராகச் சதிசெய்தனர். அதனாலேயே பராசரனையும் வசிட்டனையும் சுதாசன் ஒதுக்கினான் என ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல .. ." எனச் சந்திரகுப்தன் காலம்முதலாக ஒரு மாபாரத நிகழ்வில் குறிப்பிடுகிறது. 26ம்பாடலில்; மராஅமும் செருந்தியும் காஞ்சியும் ஞாழலும் இலவமும் என "தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல" எனத் தமிழர் ஐவரைப் படிமவடிவில் குறிப்பிடுகிறது.
உருவப்பல்தேர் சேத்சென்னியின் மகள் பாவையைப் பிராமண வேடமிட்டுக் காதலிப்பதுபோல் நடித்துக் கெடுத்து திருமணத்தில் பாணிக்கிரணம் செய்ய முயன்றபோது முசுகுந்தன் ஓடிவிட்டதை ஸ்ரீமகா கந்தபுராணத்தில் தக்ஷன்=சேத்சென்னி குறிப்பிடு கிறான். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலிரையும் பயன்படுத்திச் சோழநாட்டையும் கைப்பற்ற இந்திரனாக முசுகுந்தன் அறிவித்துக் கொண்டான். இந்நிலையில் சோழநாட்டின் புரோகிதனான அலெக்சாந்த பூர்ணகாசியப்ப வசிட்டன்; ஜமதக்கினி எனப் பெயர்பெற்று சேத்சென்னியும் தனதுமகன் கரிகாலை வேந்தனாக்க வேள்விகள் செய்ய விழைந்தபோது; தொண்டை நாட்டுக்குச் செல்லவேண்டியிருப்பதால் பிறகுபார்க்கலாம் எனச்சொல்லிச் சென்றுவிட்டான். பாவையைக் கெடுத்த முசு குந்தனோ; விபச்சாரி என இழிவுபடுத்தி ஏற்கமறுத்தான். இந்நிலையில் சேத்சென்னியால் நடத்தப்பட்ட வேள்வியில் பூசலிட்ட முசுகுந்தன்; வேள்விப்பலிப் பசுவைக் கடத்தியதோடு நாட்டைத் தன்னிடம் ஒப்படைக்கவும் கட்டாயப் படுத்தினான். இதனைக்கண்டு வருந்திய விசுவாமித்திரன் மற்றும் கரவேலனின் பாதுகாப்பில் இருந்த பாவை; முசுகுந்தனின் கழுத்தை நெறித்துத் தொண்டை நாட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்தபோது யாககுண்டத்தில் வீழ்த்தியதாகத் தெரிகிறது. அவளது ஒருபக்கத்து உடல் கருகிவிட்ட நிலையில் நிறைசூலியான பாவையை எடுத்துக்கொண்டு கரிகால்சோழனும் படையினரும் வேள்விக்களத்தை நீங்கி மறைந்துசென்றனர். இந்நிலையில் முசுகுந்தன்; பரசுராமன் எனப் பெயர்பெறுகிறான். பாவைக்குச் செங்குட்டுவன் பிறக்கிறான். செங்குட்டுவனை மகனாக ஏற்க மறுத்த முசுகுந்தன்; பாவையை விசுவாமித்திர குல விபச்சாரி எனக் குற்றம்சுமத்தி; பழையமன்றாடி எனப் பெரியபுராணத்திலும் பெயர்பெற்றான்.
தங்கை பாவையைக் காக்கச்சென்ற கரிகால் இல்லாதவேளையில்; தனது துணைவி ரேணுகாவாலேயே தங்களது சதித்திட்டங்கள் அனைத்தும் கரிகால்சோழனுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஐயம் கொண்ட ஜமதக்கினி; ரேணுகாவின் தலையை வெட்டப் பரசுராமனைப் பணித்தான்; காரணம் ரேணுகாவும் கரிகால்சோழனின் மனைவி இலக்குமி=ஸ்ரீயும் அக்கா தங்கையர்; சினம் தனியாத ஜமதக்கினி; கரிகால்சோழனின் மனைவியின் தலையையும் வெட்டிவிட்டு உடலைக் கொண்டுவரும்படி பரசுவுக்குக் கட்டளையிட்டான். கரிகாலின் மனைவியின் தலைவெட்டி வீசிவிட்டு உடலை எடுத்துச்சென்றபோது தடுக்கவந்த ஏழு சிறுமியரையும் தனது பரசு என்னும் கருவியால் வெட்டிக் கொன்றான். இதனை அறிந்த மக்கள்கூட்டம் ஜமதக்கினியின் ஆசிரமத்துக்கு வந்தபோது பரசுராமன் சேரல மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மக்கள் ஜமதக்கினியைக் கொலைசெய்தனர். கரிகால்சோழனின் மனைவி ஸ்ரீயின் தலையை முதலில் கண்டெடுத்த கரிகாலின் சூரியகுடியினர்; அங்கலம்மா= அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர=ஆந்தரதேசத்தோர் குலதெய்வமாகவும் கொண்டாடுகின்றனர். ஏழு கன்னிப்பெண்களைக் கன்னிமாராக இந்தியா எங்கும் கொண்டாடுகின்றனர். பாவையைத் தீப்பாய்ந்த அம்மன், பச்சையம்மா, காமாட்சி, மீனாட்சி எனப் பலபெயர்களில் வழிபடுகின்றனர். கொலையானோரின் அடையாளத்தை மறைக்க ஜமதக்கினியால் அங்கலம்மாவின் உடலுடன் மாற்றிச் சேர்க்கப்பட்ட ரேணுகாவின் தலை சேர்ந்த உருவுக்குமுன் அங்கலம்மாவின் தலை வைக்கப்பட்டு; மாறியம்மா எனப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடுகின்றனர்.
ஜமதக்கினியின் கட்டளைப்படி சோழநாட்டில் நடந்த தகாச்செயல்கற்குக் கரிகால்சோழனைப் பொறுப்பாக்கிப் 12ஆண்டு தண்டனை விதித்து நாடுகடத்துவதாக அறிவித்தனர். எதிர்த்த அனைவரும் முசுகுந்தனால் அடக்கப்பட்டனர். புலியூர்=சிதம் பரத்தில் தமிழ் அந்தணரால் பாதுகாக்கப்பட்ட சோழரின் திருமுடியைப் பெற்று முடிசூட்டிக்கொள்ள முசுகுந்தக் கூத்தன் முயன்றபோது; அந்தணர் முடிசூட்ட மறுத்தனர். சினமுற்ற முசுகுந்தக் கூத்தன்; தில்லைவாழ் அந்தணரை விரட்டிவிட்டுப் பிராமணரைக் குடியமர்த்தினான். தில்லையில் இருந்த தீர்த்தங்கர=பள்ளிகொண்ட கண்ணனையும் அமணதீர்த்தங்கரி= தில்லைக்காளி=பாவையையும் நீக்கினான். தில்லையை நீங்கிய அந்தணர்; 12ஆண்டு தண்டிக்கப்பட அகத்தியன் கரிகால் வாழ்ந்த பொதியைப் பகுதிக்குச் சென்றதால் சேரலத்தில் குடியமர்த்தப் பட்டனர். சோழநாட்டை ஆள்வதற்கான பொன் ஆரம்; அரசவம்சனோ சூரியகுடியினனோ அல்லாத விதுரனின் மகன் நெடுஞ்செழியன்=நகுஷனிடம் வழங்கப்பட்டது. நெடுஞ் செழியனும் சிலகாலம்வரை நல்லவனாகவே இருந்தான். பின்னர் பரசுராமனால் சோழருக்கெதிராக மாறினான்.
சேரலமலைகளுக்குத் தப்பியோடிய பரசுராமன்; தனது அதிகாரத்தைக்கொண்டு பிராமணரின் உதவியுடன் சேரலநாட்டின் பல பகுதிகளைக் கட்டுப்படுத்திப் பிராமணரிடம் ஒப்படைத்தவை பரசுராமக்ஷேத்ரம் எனப்பட்டன. மீண்டும் சோழநாட்டுக்கு வந்த பரசுராமன் தனது தந்தை ஜமதக்கினி கொலை செய்யப்பட்டதை அறிந்து; கரிகாலின் தந்தை சேத்சென்னியைக் கொன்றான். மாபாரதத்தில் தீர்த்தயாத்ரா பருவத்தில் பரசுராமனும் ஒளியிழந்து பிருகுதீர்த்தத்தில் நீராடி ஒளிபெற்றதாக உள்ளது; பாண்டவரும் தீர்த்த யாத்திரை சென்றதாக உள்ளது; தண்டனை பெற்றவர்கள் அமணத்தில் தொண்டு செய்ய வேண்டிய கட்டாயவிதி இருந்ததாகத் தெரிகிறது. சேரநாட்டில் சேரலாதர்களைக் கட்டுப்படுத்திப் பெருஞ்சேரலாதனைப் பாதுகாப்பாளனாக அறிவித்தான். பெறுஞ்சேரலாதன் வாலி எனவும் அவனதுதம்பி நெடுஞ்சேரலாதன் சுக்ரீவன் எனவும் பரசுராமனே மாறீசனாகவும் இந்திரனாகவும் இராமாயணத்தில் பெயர்பெற்றனர். பரசுராமனின் கட்டுப்பாட்டை ஏற்காத அடிமையாக இருக்கவும் விரும்பாத நெடுஞ்செழியன்; பரசுராமனையும் அடக்கினான். கட்டுப்படுத்த விரும்பிய பரசுராமன்; பிராமணப்பெண்ணை நகுஷ நெடுஞ்செழியனின் மகன் யயாதிக்கு மணம் செய்வித்துச் சூத்திர நெடுஞ்செழியனைச் சற் சூத்திரனாக அல்லது சத்ரிய=ஒளியனாக அறிவித்துச் சந்திர குலத்தனாக்கினான். 12ஆண்டு முடிந்த நிலையில் சோழ நாட்டை ஆளும் தகுதிக்கான பொன் ஆரத்தைத் திரும்ப ஒப்படைத்த நெடுஞ்செழியன்; பரசுராமனுக்கு அடிமையாக இருக்க விரும்பாமல் மாறீச பரசுராமனின் துணையுடன் மீண்டும் பொன்ஆரத்தைக் களவாடினான். மயனின் பெண்ணையும் கெடுத்ததால் தாய்வழி மரபுப்படி விசுவகர்ம மயனிடமிருந்து இலங்கையையும் கைப்பற்றி மறைந்து கொண்டான்.
அதேகாலத்தில் இந்தியாவுடன் ஒட்டியிருந்த இலங்கை; புயலாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கடல்நடுவே சென்று தீவாகி விட்டது. இலங்கையில் நெடுஞ்செழியன்; இராவண சுரனாக மறைந்து கொண்டான். இராமன் எனக் கரிகாலும் அனுமன் மற்றும் இலக்குவன் எனச் செங்குட்டுவனும் இராமாயணத்தில் பெயர்பெற்றுப் பரசுராம மாறீசனை விரட்டியடித்ததால் மீண்டும் வடக்கே சென்று துர்யோதனனாக மாபாரதத்தில் பெயர் பெறுகிறான். செங்குட்டுவன் அனுமனாக இலங்கை சென்று பொன் ஆரம் வைக்கப்பட்ட இடத்தையும் இராவணனையும் கண்டு வெற்றியுடன் திரும்பியபோது நீந்திச்செல்லத் தக்கதாக இருந்த இலங்கைத்தீவு; மீண்டும் கடல் கொந்தளிப்பால் இடைவெளி அதிகமாகிவிட்டது. இலங்கையிலிருந்து முத்திரை மோதிரத்துடன் திரும்பிவந்த செங்குட்டுவனின் தலைமைக் கீழ் வேலிர் படையினர் ஒப்படைக்கப்பட்டனர். செங்குட்டுவனின் தந்தை முசுகுந்தனால் கைப்பற்றப்பட்ட வேலிர்படையையும் திரும்பெற முசுகுந்தனுடன் போரிட்ட தகவலை; கண்ணகிக்குச் சிலைவடிக்கக் கல்லெடுக்கச் சென்றதாகச் சிலப்பதிகாரம் மாற்றிக் குறிப்பிடுகிறது. மாபாரதமோ சிவ இந்திர்னே பாசுபதார்த்தத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. நெடுஞ்சேரலாதனின் உதவியுடன் சேரலநாட்டினரும் அன்றைய இலங்கைக்குப் பாறைகளைக்கொண்டு பாலம் அமைத்தனர். இதனை சேது எனக் குறிப்பிடுகிறாம்; சுப்ரமண்ய பாரதியும்: "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்" என்றான். இராவணன் அழிக்கப்பட்டான். கைப்பற்றப்பட்ட பொன் ஆரத்தை அணிந்து ஆட்சிசெய்ய முயன்றபோது பொது மக்களுள் ஒருவன்; '12ஆண்டுக்குப் பிறகும் ஆரம் இராவண நெடுஞ்செழியனிடம் இருந்ததால் கறைப்பட்டுள்ளது' என முறையிட்டான். ஆரம் மீண்டும் அக்னிப்பிரவேசம் செய்து புதுப்பிக்கப்பட்டது. வடக்கே ஓடிய பரசுராமன் கிரேக்கரின் துணையுடன் மீண்டும் சோழநாட்டையும் கண்ணனின் துவாரகா என்னும் துவரையையும் வேங்கடத் திருப்பதியையும் தாக்கினான். ஒருநிலையில் தருமன்=கரிகாலுக்குரிய நாடுகளையும் ஐந்து திணை அரசர்களுக்கும் பொதுவான திருப்பதியையும் சூதரின் உதவியுடன் சூதாட்டத்தில் தருமனிடம் வென்றுள்ளான். கரிகாலே தருமனாகவும் செங்குட்டுவனே அர்ச்சுனனாகவும் பெயர் பெற்று; மாபாரதத் துர்யோதன பரசுராமனையும் அழித்தனர். இராமாயணத்தில் சோழநாடும் அதனை ஆள்வதற்கான பொன் ஆரமுமே சீதை எனப்பட்டது. மா பாரதத்தில் இந்திய மண்ணே த்ரௌபதி=திரிப்பதி=திருப்பதி=இந்திரப்பிரஸ்தமாகப் பெயர்பெற்றது. சோழ மண்ணே கரிகால்=திருமாலின் மனைவி பூதேவியாகவும் வைதேகியாகவும் பெயர்பெற்றது. இந்நிலையில் ஹெலனுக்குச் சந்திரகுப்தன் கொடுத்த வாக்குறுதியை மதித்து, குறுநடைப் புறா=ஹெலனின் வேண்டுதலை ஏற்று வடவேங்கடம் தென் குமரி நீங்கலாக அனைத்து நாடுகளையும் ஹெலனிடம் கொடுத்தனர். வடவேங்கடம் வரையிலான நாடுகள் அனைத்தும் செங்குட்டுவனிடம் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து நாடுகளையும் மீட்ட கரிகாலே அமணத்தில் இறுதித் தீர்த்தங்கரனாகிப் புத்த அமண கோதமன் ஆனபோது புத்தமதம் என்பதாக எதுவும் இல்லை. அமணம்தான் மேன்மைப்படுத்தப்பட்டது.# மேற்கண்ட வரலாற்றுக்கான சான்றுகள் பல்லாயிரக் கணக்கில் பல இந்தியமொழிகளில் உள்ளன. சிலவற்றைக் காண்போம்.
* கிருஷ்ணகிரி நகரில் மிண்டகிரியில் உள்ள நடுகல்லில் புலி(சோழருடன்) பொருது இறந்துபட்டானைச் "சிவன்படவன்" என்று குறிப்பிட்டுள்ளனர். சிவன்படவனது கூட்டத்தரே செம்படவர், பார்கவர் என மாபாரதத்திலும் பெயர்பெற்றனர்.
# முசுகுந்தனை ஒதுக்கித் தீர்த்தங்கரியான பாவையைக் காஞ்சி காமகோட்டத்திலிருந்து நீக்க ஏழு நதி=படைகளைக்கொண்டு வந்ததாகக் காஞ்சிப்புராணம் குறிப்பிடுகிறது. பின்னர் முறைப்படி பாவையை நீக்க முசுகுந்தனும் தீர்தங்கரப் பதவிக்குப் போட்டியிட்டுப் பிராமண=பிற அமணரின் உதவியுடன் வென்று மகாவீர் எனப் பெயர்பெற்றான். இதனை: "'வேள்வியில் பலியாகும் உயிர், சொர்க்கத்தை அடையும்' என்றால்; பிராமணர் ஏன் தங்களையே பலியிட முன்வருதில்லை? அமணத்தில் சேர்ந்த பின்னர்; கொலை வேள்விகளை ஏற்காவிட்டாலும்; பாவம்-புண்ணியம் சொர்க்கம்-நரகம் என ஏற்கும் மஹாவீர்; சொர்க்கத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறான்" என; புத்தன்-கரிகால் குறிப்பிடுவதாக; மேலும் பல சான்றுகள் உளளன. அமணத்தில்; கொலை வேள்வியை எதிர்த்த கரிகாலின் புத்தநெறி; கலப்பிரர் காலம்வரை நீடித்தது. புத்தன்= கரிகால்=புத்தகோதமனை இறுதித் தீர்த்தங்கரனாக அமணர்கள் வழிபடப்பட்டனர் என்பதைப் புதைபொருள் தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன."புத்", "சிவ்" என்னும் சொற்கள்; பிறவிப்பெருங்கடலை நீந்திப் பெருவாழ்வு பெறுவதையே குறிக்கின்றன. ஆயினும் சிவ்=சிவன் என்னும் சொல் பழந்தமிழ்ப் பாடல்களிலோ பிற இலக்கியங்களிலோ இடம்பெறவில்லை. "பொருளும் சாரமும் இல்லை; மாற்றம் மட்டுமே உள்ளது" என்பதே கரிகால்=புத்தனின் கண்டுபிடிப்பு.
'புத்தனுக்கு வால்மீகிராமாயணம் முற்பட்டது, பழந்தமிழ்ப் பாடல்கள் பிற்பட்டன'; என்னும் கருத்துக்கு முரணாக இலங்கையில்; புத்த ஆலயம் போன்ற அழகிய மேடையில் அனுமன் சீதையை=பொன் ஆரத்தைக் கண்டதாக வால்மீகியின் சுந்தரகாண்டம் குறிப்பிடுவதும்; பழந்தமிழ்ப் பாடல்களில் புத்தன் இல்லாததோடு; கொலைவேள்விகள் நடந்ததையும்; பிராமணிய வேள்வி யாகங்களை முற்றிலுமாக நீக்கித் தடைசெய்தவனே கரிகால் என்பதையும்; பழந்தமிழ்ப் பாடல்களும் சிலப்பதிகாரமும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. புத்தன் யார்? என்பதையும்; இராமாயண காலத்தை மறைக்கச் பழந்தமிழ்ப் பாடல்கள் திருத்தப் பட்டதையும் தெளிவாக உணரமுடிகிறது. இறுதித் தீர்த்தங்கரனான கரிகால்; புத்தகோதமன் எனப் பெயர் பெற்றதும்; பிற அமணர்=பிராமணர் அமணத்திலிருந்து நீக்கப்பட்டதும்; அதனை ஏற்காத கரிகால் அவர்களை ஏற்று அமண கோதமனாகச் செயல்பட்டதும் அமணநூல்களிலேயே தெரிகின்றன. பிற்காலத்தில் அமணநூல்களும் அமணமும் பிளவு படுத்தப்பட்டுச் சிங்களரால் சிதைக்கப்பட்டன; புத்தமதத்தைத் தோற்றுவித்து; புத்தன் குறித்த புனைவுகளையும் கல்வெட்டுக்களையும் பலரின் பெயர்களில் எழுதவும் பொறிக்கவும் செய்தனர். ஆயினும் சிங்களருக்குப் புத்தம் ஒரு கேடயமாகவே இன்றுவரை பயன்படுகிறது; சிங்களர் எவரும் உண்மையான புத்த நெறிகளை எக்காலத்திலும் ஏற்று நடந்ததில்லை. பிற பகுதிகளிலும் கீழை நாடுகளிலும் உண்மை வரலாற்றை அறியாத பௌத்தர்களாகப் பலரும் இருப்பது வேதனையளிப்பதாகும். உண்மை வரலாறு; பௌத்தரையும் மக்களையும் சென்றடையுமா? தமிழன் அதனை அனுமதிப்பானா?