Saturday 28 September 2013

பகவான் புத்தர்

பகவான் புத்தர் பகவான் புத்தர் - நூலாசிரியர் - 1876ல் கோவாவில் ஒரு சிற்றூரில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இறந்தார். மராத்தியும் சம்ஸ்கிருதமும் பாலி மொழியும் அறிந்தவர். அவர் குறிப்பிடும் சில முக்கியமான தகவல்களைக் காண்போம்: பௌத்த தருமத்தை அறிய முயன்று நேபாலம், கயை சென்று முயன்றார்; ஆனால் இலங்கையில்தான் பௌத்த சாத்திரம் மற்றும் திரிபிடக நூல்களை அறியமுடியும் எனத் தெரிந்துகொண்டு இலங்கை சென்று தீட்சை பெற்று பாலி நூல்களை ஆழ்ந்து பயின்றார். பர்மாவுக்குச்சென்று தியானவழியைப் பயின்று பின்னர் இந்தியாவுக்குத் திரும்பினார். பௌத்த தர்மப்படி மீண்டும் குருவின் இசைவுபெற்று இல்லறத்துக்குத் திரும்பினார். தர்மானந்த கோசாம்பியின் நூலை மராத்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. விடியல் பதிப்பகம் -2012; (முதல்பதிப்பு சாகித்ய அகடெமி 1957). பாலிமொழி நூல்களையும், பௌத்த நூலான திரிபிடகத்தையும் ஆய்வுசெய்து சான்றுகளுடன் எழுதப்பட்ட நூலே தர்மானந்த கோசாம்பி அவர்களின் பகவான் புத்தர். பொது: அமணநூல்களில் உள்ள சில சொற்களுக்குப் பொருள்: காபோதம் -புறா அல்ல; புறாவண்ணமுள்ள வெள்ளைப் பூசணி. குக்குடம் -கோழி அல்ல; எழுமிச்சம்பழம்; மாமிசம் என்பது பழத்தின் சதைப்பற்று, அஸ்தி என்பது எலும்பல்ல பழத்தில் உள்ள விதை மற்றும் கொட்டை; மார்ஜாரம் பூனையல்ல, குக்குடம் - எழுமிச்சையை உண்டு அடக்கவேண்டிய ஒருவித வாயுவையும் குடறிப்பன. எட்வின் ஆர்னால்டு எழுதிய ஆசிய ஜோதி - Light of Asiya - நூலில் புத்தர் பெருமானைப் புராணவடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சுவையுள்ளதாக இருந்ததால் மேலை மற்றும் கீழநாடுகளில் பெரும்செல்வாக்கைப் பெற்றது. அமணசமயத்தின் 23ஆம் தீர்த்தங்கரரின் "சாதுர்யாம தருமம்" என்னும் நூல் தர்மானந்த கோசாம்பியின் உள்ளத்தைக் கவர்ந்ததால் அதுகுறித்து ஒரு சிறப்பு நூலை எழுதினார்; அந்நூல் அவரது இறப்புக்குப் பின்னர் வெளிவந்தது. இந்திரனுடைய சாம்ராஜ்ஜியமத்தைப் பரீச்சித்தின் சாம்சாஜ்யத்துடனோ, ஜனமேஜயனுடைய சாம்ராஜ்யத்துடனோ ஒப்பிட முடியாது; அவர்கள் பலிகொடுத்து யக்ஞங்கள் செய்ய ஊக்கமூட்டினார்கள். அவர்களின் முயற்சியால் கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்டபகுதி ஆரியவர்த்தம் ஆனது என்பதோடு அவர்களது பெருமை தீர்ந்துவிடுகிறது. ஆரியர்க்கும் தாசர்க்கும் நிகழ்ந்த போராட்டத்தில் பலிகொடுக்கும் வேள்விப்பண்பாடு மட்டும் உறுதிபெற்று ஓங்கி வளர்ந்தது. புத்தருக்கு முன்பு இந்த பலிகொடுக்கும் வேள்விப் பண்பாடே பாரதநாட்டில் நிலவிவந்தது. புத்தரின் வரலாற்றை கி.பி 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழகத்தின் புத்தகோஷரின் நூல்களையும் பாலி மூலநூள்களையும் தவிற பிறமொழிகளில் நூல்கள் இல்லை. [அதே காலத்தில் வச்சிரநந்தி ஆசாரியர் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவியதாக உள்ளதும்; அங்கு தொல்தமிழ்ப்பாடல்கள் தொகுப்புக்களாக எழுதப்பட்டதும், தமிழில் அதே காலத்தில் உருவான மணிமேகலை உள்ளதும்; குண்டலகேசி அழிக்கப்பட்டுவிட்டதையும் கலித்தொகையும் பரிபாடலும் எழுதிச்சேர்க்கப்பட்டதும்; இறையனார் களவியல் எழுதப்பட்டுத் தொல்காப்பியம் மாற்றியமைக்கப்பட்டதும்; அன்றுவரை அமண சமயம் மட்டுமே இருந்தது பௌத்த சமயம் என்பதாக ஒன்று இல்லை என்பதும் ஆசிரியர் அறியாதன என்பது குறிப்பிடத்தக்கது.] பாலி இலக்கியத்தில் திரிபிடகம்; சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் ஆகியவை முக்கியமானவை. புத்தகோஷர் தமது நூல்களில் இவற்றிலிருந்து மேற்கோள்களைல் குறிக்கும்போது 'பாலி கூறுவதாவது, பாலியில் கூறியிருப்பதாவது எனக் குறிப்பிடுகிறார். அட்டகதாயம் என சிங்கள மொழியில் வழங்கிய அட்டகதை என்ற சொல்லையும் குறிப்பிட்டுச் சில வாக்கியங்களை எழுதுகிறார். சிங்களத்தீவுக்கு வெளியில் உள்ளோருக்கு அவை பயன்படுவதில்லை. புத்தகோஷர் சிங்களரின் அட்டகதாயத்தைச் சுருக்கித் திரிபிடகமொழியில் அவற்றுக்கு உருக்கொடுத்தாதால் அவையும் பாலி என வழங்கப்பட்டு மதிக்கப்பட்டன. அங்கர் மகதர் காசியர் போசலர் வச்சியர் மல்லர் கேசியர் வம்சர் குருநாட்டினர் பாஞ்சாலர் மச்சர் சுரசேனர் அஸ்ஸகர் அவந்தியர் கந்தரர் ஆகியோரின் நாடுகள் அங்குத்தரகாயத்தில் நான்கு இடங்களில் வருகின்றன. புத்தர் பிறப்புக்கு முன்பு நாவலந்தீவில் பதினாறு நாடுகள் இருந்ததாக லலிதவிஸ்தாரத்தின் மூன்றாம் அத்யாயம் குறிப்பிடுகிறது. 1. அங்கம் - அங்குத்தராபம்; மகதத்துக்குக் கிழக்கே இருந்ததை மகதநாட்டவன் வென்றதால் மக்கள் ஆட்சிமுறை மறைந்தது. நாலடைவில் மகதத்தோடு இணைந்து அங்கமகதம் எனலாயிற்று. இங்கு சம்பாநகரத்தில் கக்கரா ராணி கட்டிய குளத்தின் கரையில் தங்கிய புத்தர் தர்மோபதேசம் செய்ததாகத் திரிபிடகம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பிம்பிசாரன் இதனைப் பெருவேள்விகள் செய்துவந்த பிராமணன் சோணதண்டனுக்கு நன்கொடையாக அளித்தான். 2. மகதம் மற்றும் கோசலம் பசேநதியாலும் பிம்பிசாரனாலும் ஏகாதிபதிகளாக ஆட்சிசெய்யப்பட்டன. 3. கோசலம்: தலைநகரம் சிராவஸ்தி; இது அசிரவதி (இப்போது ராப்தி) நதிக்கரையில் இருந்தது. பிரசேனஜித்-பசேநதி ஆண்டான். லலிதவிஸ்தாரத்தில் கோசல அரசர்களின் இழிகுலப்பெயர் மாதங்ககுலம்; மாதங்க [புலைய]குலப்பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடப்படுகிறான். தம்மபத அட்டகதையில் இது விடுடபன் (விதுர்த்தபன்) கதையில் தெரிகிறது. 4. ராஜகிருகம்: மகதரின் ராஜதானி பீகார் மாநிலத்தில் திலையா ரயிலடியிலிருந்து பதினாறுகல் தொலைவில் உள்ளது. 5. காசி: இந்நாட்டு அரசர்களைப் பிரமதத்தன் என்பர் எனச் சாதக அட்டகதையில் தெரிகிறது. அமணரின் 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்; வாரனணாசி அரசன் அசுவசேனனின் ராணி வாமராணிக்குப் பிறந்தவர். புத்தரின் காலத்தில் இந்நகரின் சுதந்திரம் கெட்டுக் காசிகோசலம் எனக் கோசலநாட்டுடன் சேர்ந்துவிட்டது. 6. வஜ்ஜி: மூன்று மகாஜன ஆட்சியைக்கொண்ட வஜ்ஜி பவா குசிநாரா ஆகியவற்றில் ஒன்று வஜ்ஜி. இவற்றை ஆண்டவர்கள் மல்லவர்கள். வஜ்ஜி -லிச்சவிகளின் அரசு வலிமையானது. அவர்களது தலைநகரம் வைசாலி. 7. வைசாலிக்குக் கிழக்கே விதேகர்களின் நாடு இருந்தது. ஜனகனைப் போன்ற வள்ளல்கள் அங்கே அரசாண்டார்கள். விதேகர்களின் கடைசி அரசன் சுமந்தரன் மிதிலையை ஆண்டதாக லலிதவிஸ்தாரம் குறிப்பிடுகிறது. 8. மலைநாடு: மல்லர்களின் நாடு; வஜ்ஜிக்குக் கிழக்கிலும் கோசலத்துக்கு மேற்கிலும் இருந்தது. வஜ்ஜிநாடு போலவே இங்கும் குழு ஆட்சிமுறையே இருந்தது. ஆனால் மல்லரிடையே பிளவேற்பட்டு பவா குசிநாரா என இரண்டானது. 9. சேதி: சேதிஜாதகம் வேஸ்ஸந்தர ஜாதகம் இருண்டிலும் சேதி -சிவி -மத்த -மத்தர -சைத்தியநாடு குறித்த செய்தி உள்ளது. அங்கு பிராமணர்கள் வலிமையாக இருந்தனர்; அதன் வேஸ்ஸந்தரனுடைய மனைவி மத்தி - மாத்திரி. மத்த -மத்தர நாடுதான் சேதிநாடு; தலைநகரம் ஸ்வஸ்திவதி -ஸோத்திவதி. கடைசி அரசன் உபசரன் அல்லது அபசரன்; பொய் சொன்னதால் அவனது புரோகிதன் சாபமிட்டு அவர்களது புதல்வர் ஐவருடன் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். வெளியேற்றப்பட்ட ஐவரும் வெவ்வேறு நகரங்களை உருவாக்கியதாக சேதிய சாஜதகம் கூறுகிறது. வேஸ்ஸந்தரனுடைய சொந்தநாடு சிவி; சேதிநாட்டுக்கருகில் இருந்தது. அவன் தனது கண்களைப் பிராமணனுக்குக் கொடுத்த கதை ஸிவி ஜாதகத்தில் உள்ளது. வேஸ்ஸந்தர அரசகுமாரனும் தனது இரண்டு குழந்தைகளையும் பட்டத்து யானையையும் மனைவியையும் தானம் கொயடுத்தான் எனவும் கூறுகிறது. வம்சம் -வத்ஸம்: வத்ஸரின் தலைநகரம் கோசாம்பி -கௌசாம்பி; உதயனான் என்ற உல்லாசமன்னன் ஆண்டதாக தம்மபத அட்டகதையில் தெரிகிறது. 10. குருநாடு: தலநகரம் இந்திரப்பிரஸ்தம்; இதனைக் கௌரவியன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அங்கு கல்மாஷதம்மம் என்ற நகரருகில் வைதிகர்கள் அதிகம் இருந்துள்ளனர். 11. பஞ்சாலம் -பாஞ்சாலம் -மச்சம் -மத்ஸ்யநாடு: உத்தரபஞ்சாலரின் தலைநகர் தம்பில்லம்- தம்பில்யம் என ஜாதக அட்டகதையில் குறிப்பிடும் மத்ஸ்யநாடு பற்றிய தகவல் இல்லை; பிற பௌத்த நூல்களிலும் மிகுதியாக இல்லை. 12. ஸுரசேனம்: தலைநகரம் மதுரை -வடமதுரை; அரசன் அவந்திபுத்திரன் ஆண்டுவந்தான். வருணாசிரமத்தைப்பற்றி வாத்ஸ்யாயனருடன் விவாதித்த தகவல் உள்ளது. மதுரையில் ஐந்து குறைகள் இருந்ததாகப் புத்தர் குறிப்பிட்டுள்ளார். அவை; சாலைகள் மேடும் பள்ளமுமாகவும், புழுதி அதிகமாகவும், நாய்கள் பொல்லாதனவாகவும், பேய்கள் கொடியன வாகவும், பிட்சை கிடைப்பது மிகவும் அடரிதாகவும் இருந்தது என்பதாம். 13. அஸ்ஸகம் -அச்மகம்: கோதாவரி ஆற்றின் மருங்கில் இருந்ததாகத் தெரிகிறது. அஸ்ஸகனும் அளகனும் ஆந்தர -அந்தக அரசர்கள்; அவர்களின் நாடுகளுக்கிடையே பாவரி என்பவன் தனது ஆறுமாணவர்களுடன் ஊரை அமைத்தான்; அது மேன்மேலும் வளர்ந்தது என அட்டகதை சொல்கிறது. 14. அவந்தி: தலைநகர் உஜ்ஜைனி; அரசன் சண்டப்பிரதத் யோதனன் கொடுமையான சர்வாதிகாரம் படைத்தவன்; நோய்வாய்ப்பட்டபோது மகதநாட்டின் மருத்துவன் ஜீவகன் கௌமாரபிம்பியன் வந்தான். இந்த வைத்தியன் ராஜகிருகத்தில் ஆயுர்வேதம் பயின்றான். 15. கந்தாரம் -காந்தாரம்: தலைநகரம் தக்கசிலா -தட்சசிலை; புக்குசாதி என்ற அரசன் ஆண்டுவந்தான். தனது தளர்ந்த வயதில் ராஜகிருகயத்துக்குச் சென்று அங்கு திரிந்தபோது ஒரு வெறிகொண்ட பசு அவனைக் கொன்றது. 16. கம்பொஜம் -காம்போஜம்: வடமேற்கில் இருந்தது; தலைநகரம் துவாரகை என பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் மஜ்ஜிமநிகாயத்தில் இந்நாடு யவனர்களோடு சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. யவனகாம்போஜர் நாட்டில் ஆரியர் தாசர் என இரண்டு சாதிகளே இருந்தனர் சில சமயம் ஆரியன் தாசனாகவும் தாசன் ஆரியனாகவும் மாறியதுண்டு ஏனவும் குறிப்பிடுகிறது. குணாலஜாதகத்து அட்டகதையில் இந்நாட்டு மக்கள் காட்டுக்குதிரைகளைப் பிடிப்பதில் வல்லவர்கள் என்கிறது. லலிதவிஸ்தாரம் என்ற நூலிலும் 16 நாடுகள் குறிப்பிடப்படுகின்றன; அவற்றில்: மகத, கோசல, வம்ச, வைசாலி, அவந்தி, மதுரை, குரு, மைதிலக என எட்டுக்குல அரசர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுள் சுமந்திரனுடைய மைதில - மிதிலை மிகவும் அழகானது; ஏறாளமான படைகளை உடையவன்; பொன்னும் முத்தும் மணிகளும் அவனிடம் குவிந்துள்ளன; அவனது வீரத்தைக் கண்டு சிற்றரசர்கள் அடங்கிக்கிடந்தனர்; நண்பர்கள் நிறைந்தது, அறத்தில் பரற்றுடையவன்; அவனுக்கு நிறையச் சந்ததிகள் உள்ளனர் எனக்குறிப்பிட்டுவிட்டு புத்த்கர் பிறப்பதற்கு ஏற்ற இடம் இந்தப் பதினாறும் அல்ல என அவர்களுக்குத் தோன்றின எனக் குறிப்பிடுகிறது. மைதிலகுலம் சுமந்தரனுக்குப் பிறகு அழிந்துவிட்டது. விதேகரும் வஜ்ஜியரும் சேர்ந்தோராகத் தெரிகின்றனர். பாண்டவரின் பரம்பரையில் எந்த அரசன் ஆண்டான் என்பது இல்லை; வேறு பௌத்த நூல்களிலும் இதுபற்றிய குறிப்புக்கள் இல்லை. குருநாட்டைக் கௌரவியன் ஆண்டதாக ரட்டபாலசூத்தம் கூறுகிறது. அவன் பாண்டவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதற்குச் சான்றுகள் இல்லை எனத் திரிபிடகத்தில் உள்ளது. சாக்கியர்குலம்: பௌத்த நூல்களில் விரிவாக இடம்பெறும் சாக்கியகுலம் மேற்கண்ட அரச குலங்களுள் எங்கும் இடம்பெறவில்லை. கோசலத்தைச் சேர்ந்த ஒரு பகுதி தனது நாடு எனவும்; தனது ஆதித்திய கோத்திரத்தையும் சாக்கிய சாதியையும் புத்தனே குறிப்பிடுவதாக சுத்தநிபாகத்தில் உள்ளது. கொசல அரசன் பசநேதியின் ஆட்சியை ஏற்றிருக்கும் மகாநாபன்; சாக்கியப் பெண்ணைப் பசநேதிக்குக் கொடுக்க ஏன் மறுக்கவேண்டும் எனப் பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் வினவுகிறார். மகாநாபனுடைய அடிமைகளைப் பசநேதி மணந்திருக்கும் நிலையும் குறிப்பிடப்படுகிறது.  சிலமாந்தர்களும் அவர்களோடு தொடர்புகொண்டோரும் வரலாற்றில் ஏற்கத்தக்க தகவல்களும் சான்றுகளும் பௌத்த நூல்கள் சாக்கியகுலம் பற்றி விரிவாக்க் குறிப்பிடுகின்றபன. ஆனால் பிரசேனஜித் - பசேநதி: கோசல அரசன்; இழிகுலமான மாதங்கள் என்னும் வழியில் வந்தவன் என லலிதவிஸ்தாரமும் தம்மபத அட்டகதையில் விதூதபன்-விதுர்த்தபன் கதையிலும் தெரிகிறது. சாக்கிய குலத்தில் ஒரு அரசகுலப்பெண்ணை மணம்புரிய விரும்பினான்; அவனது குலத்தை இழிவாக எண்ணியதால் சாக்கியகுலப் பெண்ணைக் கொடுப்பதைத் தவிர்க்க மகாநாம சாக்கினுக்கும் அவனது தாசிக்கும் பிறந்த பெண்ணை - வாசவதத்யாவைச் சாக்கிய குலப்பெண் என ஏமாற்றிக் கொடுத்துவிட்டனர். அறியாத பசேநதி அவளைப் பட்டமகிசியாக்கினான். அவளுக்கு விதூதபன் எனும் மகன் பிறந்தான். அவனுக்குப் 16வயதானபோது சாக்கியப் பாட்டனார் வீட்டுக்குச் சென்றபோது தான் தாசியின் மகன் என்பதை அறிந்தான். தக்க பருவத்தில் கோசலநாட்டைக் கைப்பற்றினான். கிழத்தந்தை பிரசேனஜித்தை விரட்டியடித்தான். அஜாத சத்ருவிடம் பாதுகாப்புத்தேடச் செல்லும் வழியில் ராஜகிருகத்துக்கு வெளியே ஒரு தருமச்சத்திரத்தில் காலமானான். விதூதபன் -விதுர்த்தபன்: தந்தை இறந்ததும் சாக்கியரின்மீது படையெடுத்து அவர்களைப் படாதபாடு படுத்தினான்; சரணடைந்தவர்களையும் தப்பியோடியவர்களையும் தவிர்த்து மற்றவர்களைக் கொலைசெய்தான். அவர்களது குருதியால் தனது அரியணையைக் கழுவினான். சிரவஸ்தியில் அசிரவதி ஆற்றங்கரையில் தங்கியிருந்தபோது ஆற்றில் பெருவெள்ளம்வந்து சுழலில் சிக்கி மாண்டான். [மேற்கண்ட தகவல்களிலிருந்து நமக்குத் தெரியவருவது: வரலாற்றை மறைப்பதற்காகவே அனைத்து நூல்களும் சீனராலும் சிங்களராலும் எழுதப்பட்டன. புத்தனின் காலத்தை 500 அல்லது 1000 ஆண்டுகற்கு முற்பட்டதாக மாற்றி வரலாற்றை மறைக்க முயன்றனர் என்பதாகும். பசேநதி என்பவனே சந்திரகுப்தன். அவனை ஏமாற்றி அலெக்சாந்த மகாநாபனின் அடிமைப்படைத் தளபதி செல்யுக்கஸ்நகந்தனின் மனைவிக்கும் மகாநாபன் என்னும் கிரேக்கன் அலெக்சாந்தனுக்கும் பிறந்தவளைச் சந்திரகுப்தனுடன் புணரச்செய்து கட்டாயப்படுத்தி மணக்கச் செய்து; அவளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்கே ஆட்சியுரிமை என அறிவித்து நாட்டைக் கைப்பற்றிக்கொண்டனர்; பசேநதியின் மகன் கரவேலனையும் நாடுகடத்திவிட்டனர். பசேநதியின் மகள் பிரிதாவை மணந்த சேத்சென்னிக்கும் நாட்டைக் கொடுக்க மறுத்துவிட்டனர். சேத்சென்னியின் மகன் கரிகால்சோழனே இறுதியில் அனைவரையும் வென்று; அலெக்சாந்தனின் மகனால் கெடுக்கப்பட்ட தனது தங்கையின் மகன் செங்குட்டுவனிடம் நாடுகள் அனைத்தையும் ஒப்படைத்தான். அமணத்தில் சேர்ந்து இறுதித் தீர்த்தங்கரனானான். அவனது சீடனாக இடம்பெறும் அநந்தனே செங்குட்டுவன். இதனையும் மறைத்து; கரிகால்சோழனைப் புத்தனாக்கி பல்வேறு பொய்யான வரலாறுகளைப் புனைந்து கல்வெட்டுக்களையும் உருவாக்கினர். கரவேலனின் கல்வெட்டுக்களைக் குறித்து மௌனம் சாதித்தனர். வரலாற்றில் இல்லாத அசோகனைப் புகுத்தினர். This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. அசோகனால் சிங்கத்தலைத் தூணில் வெட்டப்பட்டதாகக் காணப்படும் 14 முக்கியமான கல்வெட்டு வாசகங்களில் ஒன்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் உள்ளபடி: " 'தம்மம்' குறித்துக் கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸியின் கட்டளைப்படி .. .. .. . இக்கல்வெட்டுக்கள் (என்னால் = Engraver) உருவாக்கப்பட்டுள்ளன." இதன்படி Gods - கடவுளர் எனப் பலரும், கல்வெட்டுக்களை உருவாக்கும்படி Commander - கட்டளையிட்ட வேந்தர் எனப் பியதஸ்ஸியும், கல்வெட்டுக்களை Engraver - வெட்டுவித்தவன் என ஒருவனும் உள்ளனர். பதினான்கு கல்வெட்டுக்களிலும் புத்தன், அசோகன் என்ற சொற்கள் இடம்பெறவில்லை. கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸி என மட்டுமே உள்ளன; கடவுளர் யார் என்பதும் இடம்பெறவில்லை. புத்த சமய நூல்கள் என நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் பெருமளவில் புத்தர் பிறந்த இந்தியக் குடிமக்களுள் எவராலும் எழுதப்படவில்லை. சீனராலும் சிங்களராலும் எழுதப்பட்ட நூல்களே பெருமளவில் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் சிங்கத்தைத் தங்களது அடையாளச் சின்னமாகக் கொண்டவை. புத்த சமயம் குறித்த நூலாகக் கருதப்படும் "அம்பத்த சூத்தா" என்னும் நூலில் 'ஞானம்' (விக்கா) என்பதன் கீழ் போக்கசாதி என்னும் பிராமண குருவின் சீடனான அம்பத்தா என்னும் பிராமணனுடன் புத்தரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில் புத்தர் குறிப்பிடுவது: "அம்பத்தா, கோசல வேந்தர் பசேனதியின் மானியத்தில் பிராமணர் போக்கசாதி வாழ்ந்துவருகிறார். ஆனால் அரசர் அவரைத் தம் எதிரில் வர அனுமதிப்பதில்லை அவருடன் ஆலோசனை செய்யும்போது ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் இருந்தே பேசுகிறார். .. .. "அம்பத்தா, வேந்தர் யானைமீதோ குதிரை மீதோ அமர்ந்து அல்லது நின்றுகொண்டு முக்கியப்பிரமுகர்களுடன் அல்லது மன்னர்களுடன் ஏதேனும் அரசாங்க விசயம்பற்றிப் பேசுகிறார் என்று வைத்துக்கொள்; அவர் அந்த இடத்தைவிட்டுப் போன பிறகு ஒரு பணியாள் (சூத்திரன்) அல்லது பணியாளின் அடிமை அந்த இடத்தில் நின்றுகொண்டு "வேந்தர் பசேனதி இப்படி இப்படிச் சொன்னார்" என்று கூறுவதாக வைத்துக்கொள்; அவன் வேந்தர் சொன்ன அதே வார்த்தைகளைத் திருப்பச் சொன்னாலும் அதனால் அவன் வேந்தராகவோ அல்லது அவரது அதிகாரிகளில் ஒருவராகவோ ஆகிவிடுவானா?" என்று அம்பத்தனிடம் கேட்பதாக உள்ளது. மேலும் புத்தருடன் இருப்பவர்கள் அனைவரும் புத்தரை "அமணகோதமர்" என்றுதான் குறிப்பிடுகிறார்கள். புத்தசமயம் தோற்றுவிக்கப்பட்டிருந்தால் அமணகொதமர் எனக் குறிப்பிடுவது ஏன்? அக்காலத்தில் வேந்தனே கடவுளாகக் கருதப்பட்டான். அவனுக்கு உதவியாக உள்ள மன்னர்களும் கடவுளராகக் கருதப்பட்டனர். மேற்கண்ட கல்வெட்டு வாசகங்களையும் அதற்குக்கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களையும்; புத்தரின் அம்பத்தனுடனான உரையாடலையும் கேள்வியையும்; சேர்த்து ஆய்வுசெய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. வரலாற்று நூல்களும் பிற்பட்ட வச்சிர நந்தியின் காலத்தில் எழுதப்பட்டவையே. மல்லிபாய் என ஒரு பெண்ணும் தீர்த்தங்கரியாக இருந்துள்ளாள். அப்பெண்ணே கரிகால் சோழனின் தங்கை. அவளைத் தீர்த்தங்கரிப் பதவியிலிருந்து நீக்கிவிடப் பெரும்முயற்சி செய்துள்ளனர். அலெக்சாந்தனின் மகனால் கெடுக்கப்பட்ட அவளைத் துரத்திவிட்டு; அலெக்சாந்தனின் மகனே தனைத் தீர்த்தங்கரனாக அறிவித்துக்கொண்டான். அவனே மகாவீர் என அமணத்தில் இடம்பெற்றவன். அப்பெண்ணின் பெயரை மல்லிநாத் என மாற்றியுள்ளனர். தீர்த்தங்கரர்களில் எண்ணிக்கையை 24 மற்றும் 25 எனக் குழப்பி; இறுதித் தீர்த்தங்கரனாக இருந்த கரிகால்சோழனையும் நீக்கிப் புத்தனாக்கி விட்டனர். 24 அல்லது 25 தீர்த்தங்கரரும் சைவைத்தில் சேர்க்கப்பட்டு மகாதேவனின் அவதாரங்களாக்கப்பட்டனர். அமணத்தில் இருந்த 63 ஸ்லோகிர்புருஷர்களை 63 நாயன்மார்களாக்கினர்.]

Saturday 14 September 2013

வன்புணர்வுக்குத் தண்டனை தேவைதான்

வன்புணர்வுக்குத் தண்டனை தேவைதான் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு இல்லாத கடந்த பல நூற்றான்டுகளாக எத்தனைபேர் தண்டனை பெற்றனர் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் 2000 ஆண்டுகற்கு முன்னர் ஒரு தமிழ்ப்பெண்ணை; அந்நியன் ஒருவன் கெடுத்தபொது சோழநாடே கொதித்தெழுந்து; கெடுத்தவனை இமையம்வரை துரத்திச் சென்றதோடு அவனது நாடான எகிப்துக்கும் ரோமுக்கும் சென்று நீதியை நிலைநாட்டிய தகவல்கள் நமது தொல்தமிழ்ப் பாடல்களில் இருப்பதை எந்த வரலாற்றாளராவது வெளிப்படுத்தினார்களா? தங்களது உயிரையும் மதியாது இறந்தோர் எத்தனைபேர் என்பது தெரியுமா? எத்தனை புலவர்களும் கணியர்களும் அலெக்சாந்தனால் கடதிச்செல்லப்பட்டார்கள் என்பது தெரியுமா? கரிகால்சோழனாலும் செங்குட்டுவனாலும் மீட்டுவரப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவையே கலித்தொகையும் பரிபாடலும் என்பதாவது தெரியுமா? திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற திருச்செந்தூர்; பரிபாடல் பாடல்களில் ஏன் இடம்பெறவில்லை என்பதாவது தெரியுமா? பரிபாடலில் 70 பாடல்களில் 22 மட்டுமே கிடைத்துள்ளன; காணாமல்போன 48ப் பாடல்களில் என்ன தகவல்கள் இருந்திருக்கும்? ஒரு விழுக்காடாவது இன்றைய ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டதா? திருச்சந்தூர் மட்டுமல்ல வேடசந்தூரும் அன்று சந்தூர்களாக; இராவணனையும் இராக்கதரையும் அடக்கி; அவனுக்கு ஆதரவாக வந்த இந்திரனை விரட்டி; பின்னர் சந்து = சமாதானம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என்பதாவது தெரியுமா? சுரன் யார், சூரசம்ஹாரம் ஏன் நடந்தது, வெளிப்படுத்தும் பாடல்கள் எங்ஙே போயின? அமைதி நிலைநாட்டப்பட்ட பிறகும் தொல்லைகொடுத்த இந்திரன் யார் என்பதாவது தெரியுமா? இறையனார் கலவியல் ஏன் எழுதப்பட்டது? எந்தப்பெண்ணின் காதலையும் எந்த இந்திரனால் கெடுக்கப்பட்ட பெண் என்பதையும்; இறைவனே கலவுகொண்ட ஏமாற்றப்பட்ட பெஞையும் அவளது காதலையும் களவுப் புணர்வையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என இலக்கணம் வகுத்த இறையனாரையும் தேடுங்கள்! கண்டடைவீர்கள்! நற்றிணை:290: "வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஒய்நடை முதுபகடு ஆரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை ஆயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்எயிற் றோயே; நீயே பெருநலத் தையே அவனே 'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே" அகநாநூறு 36 புலவர் மதுரை நக்கீரன்: " பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து கொடிவாய் இரும்பின் கோள்இறை துற்றி ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப்பாய்ந் தெழுந்து அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறிடு கதச்சேப் போல; மதம்மிக்கு நாள்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர; வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத் திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்; நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தயொடு வதுவை அயர்ந்தனை என்ப அலரே; கொய்சுவற் புரவிக் கொடித்த்தேர்ச் செழியன்; ஆலங் கானத்து அகந்தலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, நாரரி நறவின் எருமை யூரன், தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநனென்று; எழுவர் நல்வலம் அடங்க; ஒருபகல் முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே". அகம் 246: "பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை கதிர்மூக்கு ஆரல் கள்வன் ஆக நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலிநீர் அகல்வாய் யாணர் ஊர! போதார் கூந்தல் நீவெய் யோளொடு தாதார் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு ஆடினை என்ப நெருநை;அலரே காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் மீழிசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றை தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே". அகநாநூறு 212 பரணர் : "தா இல் நன்பொன் தைஇய பாவை விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. . விரவுமொழித் தகட்டூர் வேண்டுவழிக் கொளீஇ மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பொறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முனைப்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய .. ..ஆனாது எளியள் அல்லோட் கருதி விளியா எவ்வம் தலைத்தந் தோயே" என செங்குட்டுவன் செயல்பட்டதைக் காண்கிறோம். நற்றிணை10: "அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த நல்நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர .. ." என. தூதுசென்ற புலவர் பரணர்: 247ல்: " .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல் விருந்திரை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" என வேண்டுகிறார். அவனை நம்பி; ஓடிவிட்ட பாவையை மறுத்து; வழக்கு மன்றத்தில் முசுகுந்தன் மன்றாடியதைக்கண்டு வருந்தும் இளஞ்சேட்சென்னியை 184ல் காண்கிறோம்: " பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள், இனியே தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று யாங்கனம் ஒல்லுமோ அறிவுடை யீரே; உள்ளின் உள்ளம் வேமே, உண்கண் மணிவாழ் பாவை, நடைகற் றன்னஎன் அணியியற் குறுமகள்; ஆடிய மணிஏர் நிச்சியும் தெற்றியும் கண்டே" என.அவளது பாதுகாப்பு; பாரிக் குன்றின் பாதுகாப்பை ஒத்தது என; 253ல்: " புள்ளுப்பதி சேரினும்; புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து எனவ கேளாய் நினையினை நீநனி உள்ளினும் பனிக்கும் ஒள்இழைக் குறுமகள் பேர்இசை உருமொடு மாரி முற்றிய பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி பலவுஉறு குன்றம் போல பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே" எனக் கபிலன் குறிப்பிடுகிறான். பொய்நடத்தையால் ஏமாந்த சோழருக்காக கடிந்துரைக்கப்பட்டதைக் குறிப்பிடும் மருதன் இளநாகன்- 283ல்: " ..வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ ஓங்குதிரை முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தொன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே" எனக்குறிப்பிடுகிறான்; மேலும் இழிநடத்தையைப் பாவையிடம் விளக்குவதாக; 290ல் : "... .. ... .. முள்எயிற் றோயே; நீயே பெருநலத் தையே அவனே 'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே" ஆண்மகனல்ல எனவும்;. 291ல்:முள்ளுர்த் துவன்றிய ஆரியர்க்கு; ஆ இனம் கைப்பற்றியதனால் பாவை கெட்டழிந்ததாகச் சோழன்சென்னிக்கு கபிலன் தகவல்கொடுக்கிறான். ".. .மாஇரு முள்ளூர் மன்னன் மாஊர்ந்து எல்லித் தரீஇய இனநிரை; பல்ஆன் கிழவரின் அழிந்தஇவள் நலனே" எனக்குறிப்பிடுகிறது. சுற்றத்தைப் பிரிந்த பாவையையும் கரவேலைப் பழித்த வனின் இழிவும் வெளிப்பட365ல்; ".. .."கல்வயற் படப்பை அவன்ஊர் வினவிச் சென்மோ? வாழி தோழி பல்நாள் .. .வான்தோய் மாமலைக் கிழவனைச் சான்றோய் அல்லை என்றனம் வரற்கே" என. இயற்றியவர் கிள்ளி மங்கலம் என்னும் ஊரைச்சேர்ந்தவர்; சோழன் கிள்ளி யார்? நற்றிணை15ல்: "முழங்குதிரை கொளீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போல கணம்கொள .. .. பூவின் அன்ன நலம்புதிது உண்டு நீபுணர்ந் தனை.. .. மாசுஇல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட் டாங்கு சேனும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்க இவ்ஊரே"என முசுகுந்தனால் கெடுத்துக்கைவிடப்பட்ட பாவையையும்; முசுகுந்தனுக்குப் பிறந்த மைந்தன் செங்குட்டுவனையும் குறிப்பிடப்படுகின்றனர். அகநாநூறு 212 ல் பரணர்: விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. ." என்கிறான். இந்த்ச் சோழநாட்டுப்பெண்ணின் துயரத்தையும் முடிவையும் அறிய விரும்புவோர் தொல்தமிழ்ப்பாடல்களில் உள்ள கலித்தொகைப் பாடல்களையும் அதற்கு உரை செய்த நச்சினார்க்கினியரின் உரையும் கண்டு; அப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்தவன் யார் என்பதை வெளிப்படுத்தலாம்.